மாருதம் இணையத்தளத்தில் உங்களது விளம்பரங்களும் இடம்பெற வேண்டுமா.... உடனடித் தொடர்புகளுக்கு 0094763966685


ஹட்டன் பொலிஸ் நிலையத்தில் தவறுதலாக கைகுண்டு ஒன்று வெடித்துள்ளது.

Image result for grenade bombகடந்த 14 திகதி இரவு ஹட்டன் பொலிஸ் நிலையத்தில் தவறுதலாக கைகுண்டு ஒன்று வெடித்து பொலிஸ் உத்தியோகஸத்தர் ஒருவர் காயமடைந்துள்ளார்.

குறித்த குண்டு ஹட்டன் மோப்ப நாய் பிரிவில் பயிற்றுவிப்பதற்காக பயன்படுத்தப்பட்ட குண்டு ஒன்றே இரவு தவறுதலாக வெடிததுள்ளது.

குறித்த குண்டு வெடிப்பில் மோப்ப நாய்க்கு எவ்வித சேதமும் இல்லை என்றும் இதில் விரல்கள் இழந்த நிலையில் மோப்ப நாய் பயிற்றுவிப்பாளர் மாத்திரம் காயமடைந்து டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதே வேளை அக்கரபத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அக்கரபத்தனை பிரஸ்ட்டன் தோட்டப்பகுதியில் ஆற்றோராமாக கைவிடப்பட்ட நிலையில் மீட்க்கப்பட்ட கைதுப்பாக்கி ரவைகள் 12 கடந்த 14.05.2019 அக்கரபத்தனை பொலிஸாரினால் மீட்கப்பட்டன.

இந்த ரவைகள் பொது மக்கள் வழங்கிய தகவலின் படியே மீட்கப்பட்டன. இந்த ரவைகள் தொடர்பில் எவரும் கைது செய்யப்படவில்லை.

குறித்த ரவைகள் இன்று(16) நுவரெலியா நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பாக மேலதிக விசாரணை பொலிஸார் மேற்கொண்டுவருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இதே வேளை நேற்று காலை கொத்மலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் டி 56 ரக துப்பாக்கி ரவைகள் 12 கொத்மலை பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளன.

வீதியில் வேலை செய்துகொண்டிருந்தவர்கள் வழங்கிய தகவலுக்கமையவே இந்த ரவைகள் மீட்கப்பட்டுள்ளன.

குறித்த ரவைகள் வீதியோரத்தில் புற்தரை வீசிய நிலையிலேயே மீட்கப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பாக சந்தேகத்தின் பேரில் எவரும் கைது செய்யப்படவில்லை. என்றும் இவற்றினை நீதி மன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

No comments

Powered by Blogger.