மாருதம் இணையத்தளத்தில் உங்களது விளம்பரங்களும் இடம்பெற வேண்டுமா.... உடனடித் தொடர்புகளுக்கு 0094763966685


சடலமாக மீட்கப்பட்ட சிறுவன்- கடிதம் மீட்கப்பட்டதால் இறப்பில் சந்தேகம்!!

மன்னார் – பேசாலையில் தூக்கில் தொங்கிய நிலையில் 12 வயதுச் சிறுவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சிறுவனால் எழுதி வைக்கப்பட்டதாகக் கூறப்படும் கடிதமொன்றும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.


பேசாலை 7ஆம் வட்டாரம் யூட் வீதியைச் சேர்நத பிறின்ஸ்டன் ரயனா என்ற சிறுவனே தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.

மீட்கப்பட்ட கடிதம் கடந்த 08.05.2019 அன்று திகதி இடப்பட்டு எழுதப்பட்டுள்ளது.

“எனக்கும் அப்பாவுக்கும் எந்த விதத்திலும் தொடர்பும் இல்லை. நான் கேட்பவை எவற்றையும் அவர் வாங்கி தருவது இல்லை. அப்பா 2ஆம் திருமணம் முடித்தது எனக்கு பிடிக்கவில்லை“ என்று கடிதத்தில் எழுதப்பட்டுள்ளது.

அதனால் சிறுவனின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்து உறவினர்கள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

No comments

Powered by Blogger.