மாருதம் இணையத்தளத்தில் உங்களது விளம்பரங்களும் இடம்பெற வேண்டுமா.... உடனடித் தொடர்புகளுக்கு 0771519458


குழந்தைகளை வைத்து எடுக்கப்படும் ஆபாச வீடியோக்கள் புகைப்படங்கள்! இணைந்து முடிவெடுத்த இந்தியா மற்றும் அமெரிக்கா!!

அமெரிக்கா, இந்தியா இடையே கையெழுத்தாகியுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் குழந்தைகளை வைத்து எடுக்கப்படும் ஆபாச வீடியோக்கள், புகைப்படங்கள் ஆகியவை இணையத்தில் பரவுவது தடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குழந்தைகளை வைத்து எடுக்கப்படும் ஆபாச வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் ஆன்லைனில் பரவுவது தொடர்பாக புகார் அளிக்க www.cybercrime.gov.in என்ற இனையதள முகவரியை கடந்தாண்டு மத்திய அரசு தொடங்கியது.

இதனடிப்படையில் யாராவது புகார் அளித்தால், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு பிறகு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும். இதன் மீதான நடவடிக்கைகள் குறித்து விசாரிக்க அந்த இணையத்திலேயே தகவல் வழங்கவும் வசதி இருந்தது.

இதை இன்னும் வலிமைப்படுத்தும் நோக்கில், அமெரிக்காவின், என்.சி.எம்.இ.சி., எனப்படும், காணாமல் போகும் மற்றும் சுரண்டலுக்கு ஆளாகும் குழந்தைகளுக்கான தேசிய மையம் மற்றும் இந்தியாவின், என்.சி.ஆர்.பி., எனப்படும், தேசிய குற்றப் பதிவேடு பிரிவு ஆகிய அமைப்புகளுக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

அதன்படி, இணையத்தில் பரவும் குழந்தைகளின் ஆபாச வீடியோ, புகைப்படங்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் குறித்து, தகவல்களை இருநாடுகளும் தங்களுக்கு இடையில் பரிமாறிக் கொள்ளும்.

மேலும், அமெரிக்காவில் குழந்தைகளுக்கு எதிராக நடைபெற்ற பாலியல் குற்றங்கள் மற்றும் பாலியல் அத்துமீறல் குறித்து பதிவு செய்யப்பட்டுள்ள தகவல்களைம் இந்திய அதிகாரிகள் விசாரணைக்கு பயன்படுத்திக்கொள்வார்கள்.

இருநாடுகளுக்கு இடையில் கையெழுத்தாகியுள்ள இந்த புரிந்துணர்வு ஒப்பந்த மூலம், குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்கள் குறித்த விசாரணையில் இந்திய அதிகாரிகள் துணிந்து செயல்பட முடியும். மேலும் வழக்குகள் துரிதமாக முடிக்கப்பட்டு குற்றவாளிகள் எளிதாக கைது செய்ய முடியும் என அதிகாரிகள் கூறினர்.

No comments

Powered by Blogger.