மாதம்பையில் சிக்கிய ஒரு தொகை எலும்பு கூடுகள்! தீவிர விசாரணைகள் ஆரம்பம்!

மாதம்பை பகுதியில் நேற்று ஒரு தொகை எலும்பு கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கண்டுபிடிக்கப்பட்ட எலும்பு கூடுகள் சிலாப சட்ட வைத்தியரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பாக அறிக்கையை வழங்குமாறு வைத்தியரிடம் சிலாபம் நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

அத்தோடு குறித்த எலும்பு கூடுகள் சிலாப வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments

Powered by Blogger.