இலங்கை சந்திக்கும் ஊரடங்குச் சட்டம், அவசர காலச்சட்டம்....! வேதனையடைந்த அமைச்சர்


Image result for curfewஐம்பது ஆண்டுகளாக இந்த நாட்டில் இரத்தம், சண்டை, அவசரகால சட்டம், ஊரடங்கு சட்டம் என்பன இருந்துகொண்டுதான் உள்ளது என அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

கொழும்பு பண்டாரநாயக சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற தேசத்திற்கான வழி "மாநாட்டில் விசேட உரையாற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு பேசிய அவர்,

கடந்த 1971 ஏப்ரல் 5 ஆம் திகதி ஜே.வி.பி கலவரம் உருவாகிய போது நான் முதலில் ஊரடங்கு சட்டம் குறித்து அறிந்துகொண்டேன்.

இன்றும் அதே நிலைமை என்னால் அவதானிக்க முடிகின்றது. இன்றும் ஐம்பது ஆண்டுகளாக இந்த நாட்டில் இரத்தம், சண்டை, அவசரகால சட்டம், ஊரடங்கு சட்டம் என்பன இருந்துகொண்டுதான் உள்ளது.

இவை இல்லாத ஒரு நாடு என்று உருவாக்கப்போவது என்ற கேள்வி இன்றும் எம்மத்தியில் உள்ளது.

நாட்டின் பயங்கரவாதத்தை ஒழிக்க ஆட்சியாளர்கள் எவரேனும் தடையாக இருந்தாலோ அல்லது பொறுப்பில்லாது செயற்பட்டாலோ அவர்களை நீக்கிவிட்டு புதிய பயணத்தை ஆரம்பிப்போம்.

சகல கட்சிகளில் உள்ள மிகச்சரியான நபர்கள் ஒன்றிணைந்து அடுத்த ஜனாதிபதி தேர்தலில் மக்களால் சுயாதீனமாக ஒருவரை தெரிவுசெய்யும் சூழலை உருவாக்கிக்கொடுக்க வேண்டும் என்றார்.

No comments

Powered by Blogger.