மாருதம் இணையத்தளத்தில் உங்களது விளம்பரங்களும் இடம்பெற வேண்டுமா.... உடனடித் தொடர்புகளுக்கு 0094763966685


மன நல வைத்தியசாலையொன்று தீப்பிடித்ததில் 06பேர் உடல் கருகி மரணம்!!

உக்ரைனில் மனநல வைத்தியசாலையில் ஏற்பட்ட தீயின் கோரப்பிடியில் சிக்கி 6 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. 

உக்ரைனின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள துறைமுக நகர் ஓடேசாவில் 3ஆவது மிகப்பெரிய நகரமான இங்கு அரசுக்கு சொந்தமான மனநல மருத்துவமனை இயங்கி வருகிறது. 2ஆம் உலகப்போர் மற்றும் ஆப்கா

ஆப்கானிஸ்தான் போரில் பங்கேற்று மனரீதியில் பாதிக்கப்பட்ட இராணுவ வீரர்களுக்கு இங்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இந்நிலையில், கடந்த திங்கட்கிழமை மாலை குறித்த வைத்தியசாலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு கொழுந்துவிட்டு எரிந்த தீ, மேற்கூரை வழியாக பிற தளங்களுக்கும் பரவியது. இதுகுறித்து தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற 50-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

ஆனால் அதற்குள் தீயின் கோரப்பிடியில் சிக்கி 6 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். அதே சமயம் வைத்தியசாலையில் இருந்த 10-க்கும் மேற்பட்டோர் காயங்கள் இன்றி பத்திரமாக மீட்கப்பட்டனர். தீ விபத்துக்கான காரணம் என்ன என்பது உடனடியாக தெரியவில்லை. இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

No comments

Powered by Blogger.