மாருதம் இணையத்தளத்தில் உங்களது விளம்பரங்களும் இடம்பெற வேண்டுமா.... உடனடித் தொடர்புகளுக்கு 0094763966685


13 வருட இடைவெளிக்கு பிறகு மீண்டும் நடிக்கும் விஜயசாந்தி!!

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிரபலமாக இருந்த விஜயசாந்தி, 13 வருடங்களின் பின்னர் மீண்டும் படங்களில் நடிக்கவுள்ளார்.

தெலுங்கில் மகேஷ் பாபு நடிக்கும் 26 ஆவது படத்திற்கு ‘சரிலேரு நீக்கெவரு’ என்று பெயரிடப்பட்டுள்ளது. தேவிஸ்ரீ பிரசாத் இசை அமைக்கிறார். அனில் சுங்கரா, தில் ராஜு, மகேஷ் பாபு இணைந்து தயாரிக்கின்றனர்.

அனில் ரவிபுடி இயக்குகிறார். இப்படத்தின் மூலமாக, 13 வருட இடைவெளிக்கு பிறகு மீண்டும் சினிமாவில் நடிக்க வருகிறார் விஜயசாந்தி.

இது குறித்து அவர் கூறியதாவது:-


தெலுங்கில் கிருஷ்ணாவுடன் நடித்த ஹிலாடி கிருஷ்ணுடு எனக்கு முதல் படம். இதுவரை 180 படங்களில் நடித்துள்ளேன். தீவிர அரசியல் ஈடுபாடு காரணமாக சினிமாவில் நடிப்பதை நிறுத்தி வைத்திருந்தேன். இப்போது கிருஷ்ணா மகன் மகேஷ் பாபு நடிக்கும் படத்தில் நான் பங்கேற்பது குறித்து சந்தோ‌ஷப்படுகிறேன்

No comments

Powered by Blogger.