முன்னாள் முஸ்லிம் தலைமைகளுக்கெதிராக 27 முறைப்பாடுகள் : பொலிஸ் தலைமையகம்

(விஜித்தா)

முன்னாள் ஆளுநர்களான ஹிஸ்புல்லாஹ், அசாத் சாலி மற்றும் ரிஷாட் பதியூர்தீன் ஆகியோருக்கெதிராக மொத்தம் 27 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.


கடந்த 4ஆம் திகதி முதல் 12ஆம் திகதி மாலை 4 ணி வரையில் குறித்த மூவருக்கும் எதிராக 27 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளது.

கிடைக்கப்பெற்ற 27 முறைப்பாடுகளுள் தனித்தனியாக பெயர் குறிப்பிடப்பட்டு முன்னாள் அமைச்சர் ரிஷாட்டிற்கு எதிராக 12 முறைப்பாடுகளும் முன்னாள் மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலிக்கு எதிராக 5 முறைப்பாடுகளும் முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாவிற்கு எதிராக 2 முறைப்பாடுகளும் மூவரினதும் பெயர் குறிப்பிடப்பட்டு 8 முறைப்பாடுகளும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.No comments

Powered by Blogger.