செய்தியால் கூகுள் நிறுவன வருமானம் ரூ.32,700கோடி:புலம்பும் நிறுவனங்கள்!!

கடந்த 2018ம் ஆண்டு கூகுள் நிறுவனம் செய்திகள் மூலம் மட்டும் 4.7 பில்லியன் டாலர்கள் (ரூ.32,700 கோடி ) வருவாயாக ஈட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதை செய்திகளாக வெளியிடும் நிறுவனங்களுக்கு எந்த லாபத்தில் எந்த பங்கும் கிடைப்பதில்லை என்று நிறுவனங்கள் அதிர்ச்சியில் இருக்கின்றன.


மேலும், கூகுள் நிறுவனம் எங்கள் செய்திகளை பயன்படுத்தவதால், லாபத்தில் பங்குதருமா என்று செய்திகள் நிறுவனங்கள் காத்து இருக்கின்றன.

கூகுள் சர்ச் இன்ஜின்:

நாம் எளிதாக கூகுள் நிறுவனத்தின் சர்ச் இன்ஜின் மூலம் எளிதாக எதை வேண்டுமானாலும் தேடி எடுத்துக் கொள்ள முடியும்.

கூகுள் என்றாலே அடுத்த நெடியே நாம் எதை தேட நினைக்கின்றோம் என்று ஸ்கிரீனில் கொண்டு வந்து நிறுத்தி விடுகின்றது. கூகுள் நிறுவனம் முன்னணியிலும் இருக்கின்றது.
தேடலுக்கும் வருமானம் அள்ளும் கூகுள்:

கூகுள் நிறுவனம் நாம் தேடும் ஒவ்வொரு தேடலுக்கும் அந்த நிறுவனத்துக்கு லாபத்தை தருகிறது.

கூகுள் நிறுவனம் 2018ம் ஆண்டில் நான்காவது காலாண்டில் மொத்தமாக 39.3 பில்லியன் டாலர் வருவாயை ஈட்டியுள்ளது. இது அதற்கு முந்தைய வரும் தே காலாண்டில் பெற்ற வருவாயை விட 22 சதவீதம் அதிகம்.
செய்திகள் மூலம் வருமானம்:

4.7 பில்லியன் டாலர்கள் (ரூ.32,700 கோடி) வருவாயை ஈட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது இணையத்தில் உள்ள செய்தி நிறுவனங்களில் செய்திகளை நாம் தேடி படிப்பதன் மூலம் கூகுளுக்கு இவ்வளவு லாபம் கிடைத்துள்ளது.


புலம்பும் செய்தி நிறுவனங்கள்:

இந்த லாபத்தில் கூகுள் நிறுவனம் செய்தி நிறுவனங்களுக்கு எந்த பங்கும் தருவதில்லை என்று புலம்பி வருகின்றன. மேலும், இதுகுறித்து கூகுள் நிறுவனத்துக்கும் கோரிக்கையும் முன் வைத்துள்ளது.

அமெரிக்காவின் அறிக்கை:

இதுகுறித்து அமெரிக்காவின் என்எம் ஏ அறிக்கைவெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் அமெரிக்காவின் மொத்த செய்தி துறையின் வருவாய் ரூ.5.1 பில்லியன் டாலர்கள். அதில் கூகுள் பங்கு மட்டும் 4.7 பில்லியன் டாலர்கள் என்று குறிப்பிட்டுள்ளது.


லாபம் குறித்து அறிக்கை:

இதுகுறித்து கருத்து தெரிவித்த என்எம் ஏ தலைவர் டேவிட், செய்தி நிறுவனங்களால் கூகுள் அதிக லாபம் அடைகின்றன. ஆனால் அந்த லாபத்தில் செய்தி நிறுவனத்துக்கும், செய்திகளை எழுத்தும் பத்திரிக்கையாளர்களுக்கும் துளியும் பங்கும் இல்லை. இது கவலையளிக்கிறது என்று தெரிவித்துள்ளனர்.

கூகுளின் பயனாளர்களின் செய்யும் தேடலில் 40 சதவீதும் செய்தி பற்றியது தான் எனவும் என்எம்ஏ குறிப்பிட்டுள்ளது.