கூகுள் பிக்சல் 4 அதிகாரப்பூர்வ டீசர் வெளியீடு!!

                                                                                                                           - ஷர்மி -
கூகுள் பிக்சல் 4 ஸ்மார்ட்போனின் டீசர் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. புதிய பிக்சல் ஸ்மார்ட்போன் அக்டோபர் மாதம் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், ஸ்மார்ட்போனின் டீசர் வெளியாகி இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

பிக்சல் 4 ஸ்மார்ட்போனின் விவரங்கள் இணையத்தில் தொடர்ந்து வெளியாகி வந்த நிலையில், தற்சமயம் அதிகாரப்பூர்வ டீசர் ஸ்மார்ட்போனின் சில அம்சங்களை உறுதிப்படுத்தி இருக்கிறது. அதன்படி பிக்சல் 4 ஸ்மார்ட்போனின் பின்புறம் சதுரங்க வடிவில் கேமரா பம்ப் காணப்படுகிறது.

ஸ்மார்ட்போன்களில் கூடுதல் லென்ஸ்களை வழங்கும் பாணியை தவிர்த்து வந்த கூகுள் தற்சமயம் பிக்சல் 4 சாதனத்தில் மாற்றிக் கொள்ள திட்டமிட்டு இருப்பதாக தெரிகிறது. டீசரின் படி கூகுள் தனது புதிய ஸ்மார்ட்போனில் குறைந்தபட்சம் இரண்டு லென்ஸ்களை வழங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இத்துடன் எல்.இ.டி. ஃபிளாஷ் யூனிட் ஒன்றும் வழங்கப்படலாம் என தெரிகிறது. எனினும், கேமரா ரெசல்யூஷன் பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லை. இது டெலிபோட்டோ லென்ஸ் அல்லது அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ்களி்ல் எதுவாக இருக்கும் என்பதும் கேள்விக்குறியாகவே இருக்கிறது. 


No comments

Powered by Blogger.