6.5 ரிக்டர் அளவில் சிலியில் நிலநடுக்கம்!!

                                                                                                                         - ஷர்மி -
தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான சிலியில் இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.5 ஆக பதிவானது.

நேற்று நள்ளிரவு சுமார் 0.19 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

கோகிம்போ நகரில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் அங்குள்ள வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின. இதனால் அதிர்ச்சி அடைந்த மக்கள் சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விபரங்கள் வெளியாகவில்லை.