படைப்புழுவை ஒழிப்பதற்கான 7 வகை கிருமிநாசினிகள் கண்டுபிடிப்பு!!

படைப்புழுவை ஒழிப்பதற்காக 7 வகையான கிருமிநாசினிகள் கண்டறியப்பட்டுள்ளதாக, விவசாயத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மஹஇலுப்பள்ளம விவசாய நிறுவனத்தில் முன்னெடுக்கப்பட்ட பரிசோதனைகளில் இவை கண்டறிப்பட்டுள்ளதாக திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி W.M.W. வீரகோன் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் பெரும்போகத்தில் ஒரு இலட்சம் ஹெக்டேயர் நிலப்பரப்பில் இந்தத் தடவை சோளம் பயிரிடப்படவுள்ளது.

இதன்படி, இந்தத் தடவை சோளச்செய்கையின்போது குறித்த கிருமிநாசினிகளைப் பயன்படுத்துமாறு விவசாயிகளுக்கு அறிவுறுத்தவுள்ளதாக, விவசாயத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.