பசுமைப் பாதை திட்டத்தின் கீழ் A9 வீதியில் பத்தாயிரம் மரக்கன்றுகள் நடுகை!!

                                                                                                                                   - யாழ் லக் ஷன் -
உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டும் கௌரவ ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்கள் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கும் செயற்திட்டங்களுக்கு வடமாகாணத்தின் பங்களிப்பினை வழங்கும் நோக்கிலும் பத்தாயிரம் மரக்கன்றுகள் நாட்டும் ஆரம்ப நிகழ்ச்சி மாங்குளம் 226ஆவது மைல்கல் பிரதேசத்தில் நேற்றையதினம் வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவன் தலைமையில் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் யாழ் மாநகர முதல்வர் கௌரவ இம்மானுவல் ஆனல்ட் மற்றும் யாழ் இந்தியத் துணைத்தூதுவர் எஸ்.பாலச்சந்திரன் வடக்குமாகாண அவைத்தலைவர் சீ.வீ.கே சிவஞானம், மாகாண உள்ளூராட்சி அமைச்சின் அதிகாரிகள், மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் அலுவலக உத்தியோகத்தர்கள், முல்லைத்தீவு மாவட்ட செயலர், மாவட்ட செயலக அதிகாரிகள்,ஆளுநர் செயலக அதிகாரிகள், மாகாணசபையின் திணைக்களங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டதுடன் மரக்கன்றுகளையும் நாட்டிவைத்தனர்.

A9 வீதியின் குறிப்பிட்ட பகுதியினை பசுமை வீதியாக மாற்றும் ஆளுநரின் எண்ணக்கருவுக்கு அமைய இந்த மரநடுகைத் திட்டம் வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளர் திரு.பற்றிக் டிரஞ்சன் அவர்களின் மேற்பார்வையில் வடமாகாண விவசாய அமைச்சின் உதவியுடன் பிரதேச சபைகளின் பராமரிப்பில் இடம்பெறுவதுடன் இந்த திட்டத்தின் மாவட்ட ரீதியான நிகழ்வுகள் கிளிநொச்சி மற்றும் வவுனியா மாவட்ட செயலாளர்களின் தலைமையில் வவுனியா மற்றும் ஆனையிறவு பிரதேசங்களில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது

No comments

Powered by Blogger.