அவுஸ்திரேலிய ABC தலைமையகத்தினை பொலிஸார் முற்றுகை: ஆப்கானில் ஆஸி படைகளின் சட்டவிரோத கொலைகள் குறித்த புலனாய்வு அறிக்கைகளின் எதிரொலி!!

அவுஸ்திரேலிய அரச தொலைக்காட்சி, வானொலி நிறுவனமான அவுஸ்திரேலிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் (ஏ.பி.சி- ABC) தலைமை அலுவலகத்தை அவுஸ்திரேலிய பொலிஸார் இன்று காலை முற்றுகையிட்டு சோதனை நடத்தினர்.

ஊடகவியலாளர் மூவரை இலக்கு வைத்து சிட்னியிலுள்ள ஏ.பி.சி. தலைமையகத்தில் இந்த முற்றுகை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானில் அவுஸ்திரேலிய படையினரால் மேற்கொள்ளப்பட்ட அப்பாவி பொதுமக்கள் கொலைகள் மற்றும் ஒழுங்கீனங்கள் குறித்த புலனாய்வுத் தொடர் சம்பந்தமாகவே இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

2017 ஆம் ஆண்டின் வெளியான இப்புலனாய்வு அறிக்கைகள் ‘ஆப்கான் பைல்ஸ் என அறியப்படுகிறது.

ஏபி.சி. நிறுவனமானது அவுஸ்திரேலிய அரசுக்குச் சொந்தமானதாகும். எனினும். அந்நிறுவனம் சுயாதீனமாக இயங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

நூற்றுக்கணக்கான பக்கங்கள் கொண்ட, அரசின் இரகசிய பாதுகாப்பு ஆவணங்கள் தமக்கு கசிந்ததாக ஏ.பி.சி நிறுவனம் தெரிவித்துள்ளது.


இம்முற்றுகை தொடர்பாக அவுஸ்திரேலிய பொலிஸார் தெரிவிக்கையில், எவரையும் கைது செய்வதற்குத் திட்டமிடவில்லை எனவும் 2017 ஜூலை 11 ஆம் திகதி அவுஸ்திரேலிய பாதுகாப்புப் படைப் பிரதானியும் அப்போதைய பாதுகாப்பு பதில் செயலாளர் ஆகியோரிடமிருந்து கிடைத்த தேடுதல் உத்தரவுடன் இந்நடவடிக்கை தொடர்பானது எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

இத்தேடுதல் நடவடிக்கையானது ஊடக சுதந்திரம் குறித்த நியாயமான கரிசனையை ஏற்படுத்துகிறது என அவுஸ்திரேலிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

அதேவேளை, தமது ஊடகவியலாளர்களை ஏ.பிசி நிறுவனம் ஆதரிப்பதாகவும், தகவல் மூலங்களை பாதுகாக்கும் எனவும், தொடர்களின் தெளிவான பொதுமக்கள் நலன்கள் அடிப்படையில், தேசிய பாதுகாப்பு மற்றும் புலனாய்வு விவகாரங்கள் குறித்து அச்சமி;ன்றி செய்திகளை வெளியிடும் எனவும், ஏ.பி.சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post