மாருதம் இணையத்தளத்தில் உங்களது விளம்பரங்களும் இடம்பெற வேண்டுமா.... உடனடித் தொடர்புகளுக்கு 0771519458


ரத்ன தேரரின் உடல் நிலை அபாய நிலையில் நாடளாவிய ரீதியில் வெடித்துள்ள உண்ணாவிரத போராட்டம்!

ஸ்ரீலங்காவில் கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி நடைபெற்ற தொடர் தற்கொலைத்தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் நபர்கள் கைதாகும் நிலையில், சில முக்கிய அரசியல் தலைவர்கள் மீதும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில், வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன், கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹிஸ்புல்லாஹ் மற்றும் மேல் மாகாண முதலமைச்சர் அசாத் சாலி ஆகியோர் மீதே இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்பட்டு அவர்களை பதவியிலிருந்து நீக்க வேண்டும் என பல தரப்பினரும் ஜனாதிபதியிடம் கோரிக்கைகள் முன் வைத்து வரும் நிலையில்,

ஐக்கிய தேசிய கட்சிக்குள் இருப்பவர்களில் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவர்களை பதிவி விலக்க வேண்டும் எனவும் ஏனைய சில உறுப்பினர்கள் பதவி விலக கூடாது எனவும் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், கண்டியில் உண்ணாவிரதம் இருந்து வரும் ரத்தன தேரரின் உடல்நிலை மோசமடைந்து வருவதாக அவரை பரிசோதித்த வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ள தேரரை பேராயர் மல்கம் ரஞ்ஜித் ஆண்டகை மற்றும் பௌத்த பீடங்களின் மாநாயக்க தேரர்கள் என பலர் சென்று சந்தித்தனர்.

தேரரின் உண்ணா விரத போராட்டம் காரணமாக கண்டியில் கடைகள் பூட்டப்பட்டுள்ளன. நாடளாவிய ரீதியில் ரத்தன தேரருக்கு ஆதரவாக போராட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.அந்த வகையில், கிழக்கு மாகாண ஆனுநருக்கு எதிராக திருகோணமலை அலஸ்தோட்டம் இறையருட் திருத்தலம் முன்பாகவும் எஸ்.பி.ராஜ் உண்ணாவிரத போராட்டத்தில் குதித்துள்ளாா எனவும் தெரியவந்துள்ளது

No comments

Powered by Blogger.