பல்கலைக்கழக மாணவி மீது கத்திக்குத்து!!

களனி பல்கலைக்கழகத்திற்கு அருகில் இன்று (13) காலை இடம்பெற்ற கத்திக் குத்தில் படுகாயமடைந்த மாணவி ஒருவர் இராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

21 வயதான குறித்த மாணவி அவரது காதலரினால் கத்திக் குத்துக்கு உள்ளாகியுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய நபரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்