அமைச்சர் ராஜிதவுக்கு எதிராக முல்லைத்தீவிலும் மருத்துவர்கள் போராட்டம்!!

சுகாதார அமைச்சர் ராஜித சேனராத்தினவுக்கு எதிராக முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் கடமையாற்றும் மருத்துவர்கள் இன்று மதியம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பதாதைகளுடன் மருத்துவமனை முன்பாக ஒன்று கூடிய மருத்துவர்கள் சுமார் 30 நிமிடங்கள் வரை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

“நீரிழிவு நோய்க்கு தரம் குறைந்த மருந்துகள் வேண்டாம்., ராஜித வேண்டாம், புற்று நோய்க்கு தரம் குறைந்த மருந்துகள் வேண்டாம், ஒளடத அதிகாரத்தை மாபியாவிடத்தில் கையளிக்காதே, இலங்கை மருத்துவ சங்கத்துக்கு அரசியல் தலையீடு செய்யாதே“ உள்ளிட்ட பல்வேறு வசனங்கள் எழுதப்பட்ட பதாதைகளுடன் மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.