மொஸ்கோவில் நூற்றுக்கணக்கானோரை கைது செய்த பொலிசார்!!

மொஸ்கோவில் ஊடகவியலாளர் ஒருவர் கைது செய்யப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து மேற்கொள்ளப்பட்ட பேரணி ஒன்றின் போது நூற்றுக் கணக்கானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மொஸ்கோவில் ஊழல் எதிர்ப்பு ஊடகவியலாளரான ஐவன் கொலுனோவை பொலிசார் கைது செய்து தடுத்து வைத்தமைக்கு எதிராக குறித்த பேரணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த பேரணியின் போது கைது செய்யப்பட்டவர்களில் பலர் ஊடகவியலாளர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்கள் மத்தியில் ரஷ்யாவின் எதிர்கட்சித் தலைவரும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

எவ்வாறாயினும், மக்கள் எதிர்ப்பையடுத்து, கொலுநோவ் மீது சுமத்தப்பட்ட போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டு கைவிடப்பட்டு நேற்று விடுவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.