காரைதீவு கத்திக் குத்து சம்பந்தமான மேலதிக தகவல்கள்...!


                                                                                                 - மட்டு நகர் கமல்தாஸ் -
நேற்றைய தினம் காரைதீவில் நபர் ஒருவரால் கத்திக்குத்துக்கு இலக்காகி ஒருவர் மரணித்தும் மற்றையவர் படுகாயமடைந்து கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்திருந்தன.

புகைப்படத்தில் உள்ளவர் கத்திக் குத்துக்கு இலக்காகி மரணமடைந்த ஞானசேகரம் ரதாஸ் வயது 27 ஒரு பெண் குழந்தையின் தகப்பன்
அந்த வகையில் மேற் கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் கொலையினை மேற் கொண்ட சந்தேக நபர் ஒருவர் இல்லையென்றும் நான்கு பேர்கள் இணைந்து நடாத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன இருவர் இறந்த நபரை பிடிக்க ஒருவர் தலையில் அடிக்க அவரின் பெரியப்பா கழுத்தினை அறுத்துள்ளார் அதனை தடுக்கச் சென்ற இறந்த நபரின் மைத்துனரை முதுகில் கத்தியால் குத்தியுள்ளனர் இவ்வாறு தாக்குதலுக்கு இலக்கானவரே தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பிரதான சந்தேக நபரை மட்டு சிறைச்சாலையில் விளக்கமறியலில் பொலிசார் தடுத்து வைத்துள்ளதாகவும் மற்றையவர்கள் தலைமறைவாகியுள்ளதாகவும் அறியமுடிகிறது.

தலைமறைவாகியுள்ள சந்தேக நபர்களை தேடும் பணியினை முடுக்கி விட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

No comments

Powered by Blogger.