ரயிலுடன் மோதுண்டு தாயும் இரு பிள்ளைகளும் உடல் சிதறி மரணம்!!

கொழும்பு, கொள்ளுப்பிட்டி பகுதியில் ரயிலுடன் மோதுண்டு தாயும் இரண்டு பிள்ளைகளும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று மாலை 6.20 மணியளவில் கொள்ளுப்பிட்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சன்ஹில் ஹோட்டலுக்கு அருகில் உள்ள புகையிரத பாதையில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாகவும், கொழும்பிலிருந்து நோக்கி சென்ற ரயிலுடனேயே குறித்த மூவரும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பிந்திய தகவல்...

கொட்டாஞ்சேனையை சேர்ந்த ஜெனட் தர்ஷினி ராமையா என்ற 32 வயதுப் பெண் கொள்ளுப்பிட்டியில் தனது 10 மற்றும் 12 வயது மகன்களுடன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்...

இன்று இரவு நடந்த இந்த சம்பவத்தின் பின்னர் அவரின் கைப்பையை சோதனையிட்ட பொலிஸ் , “வாழ்வதற்கு வழியில்லை... பணமில்லை.. அதனால் தற்கொலை செய்துகொள்வதாக” சொல்லும் ஒரு கடிதம் அதில் இருந்ததை கண்டது.

இரண்டு பெரிய ஆண்பிள்ளைகளுடன் தற்கொலை செய்துகொள்ளும்வரை ஒரு பெண்ணை இந்த சமூகம் கண்டுகொள்ளாமல் இருந்திருக்கிறது...