இலங்கையின் தயாரிப்பாக அறிமுகமாகிறது நவீன ரக கார்!!

                                                                                                                           - ஆர்.கே -
இலங்கையை பொறுத்தவரையில் பிரதானமான பொருளாதாரதுறையாக தேயிலை மற்றும் சுற்றுலாத்துறையே விளங்குகிறது. உலகநாடுகளின் பார்வையில் தொழில் நுட்பத்துறையில் சற்று பின்தங்கிய நாடாக தென்பட்ட இலங்கை உலகநாடுகளின் பெரிய பெரிய கார் கம்பனிகளுக்கே சவால்விடும் அளவிற்கு முற்றுமுழுதாக நவீன தொழில் நுட்பங்களுடன் கூடிய அதிநவீன கார் ஒன்றினை அறிமுகம் செய்துள்ளது. முற்றுமுழுதாக இலங்கை தொழில் நுட்பவியலாளர்களினால் செயற்படுத்தப்படும் வெகோ நிறுவனமே இந்த காரினை அறிமுகம் செய்து வைத்தது. 

சில வருடங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட பன்டா நிறுவனம் தற்போழுது இலங்கைக்கு சொந்தமான கார்களை உற்பத்தி செய்து வருகிறது. இவ்வகை கார்கள் இலங்கை தயாரிப்புக்கள் என கூறப்பட்டாலும்; உண்மையில் அவை இலங்கையில் உற்பத்திசெய்யப்படவில்லை மாறாக அதன் பாகங்கள் வெவ்வேறு நாடுகளிலிருந்து கொள்வனவு செய்யப்பட்டு இலங்கையில் பொருத்தல்கள் மேற்கொள்ளப்பட்டு சந்தைக்கு விடப்படுகிறன. அந்தவகையில் இலங்கையில் முற்றுமுழுதாக தயாரிக்கப்பட்ட காராக வெகோ நிறுவனம் வெளியிட்டுள்ள காரினை கருதலாம்.

அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இக்கார் விளையாட்டு மாதிரியாகவே உருவாக்கப்பட்டுள்ளது. இரண்டு இலத்திரனியல் மோட்டார்கள் பயன்படுத்தப்பட்டுள்ள இந்த கார் 900 குதிரைவலுவில் செயற்படகூடியது என கூறப்படுகிறது. 3.5 செக்கன்களில் 0-60 கிலோமீற்றர் வேகத்திற்கு உந்துதலை ஏற்படுத்தவல்லதாக இந்த கார் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதிக வேகமாக ஒருமணித்தியாலத்தில் 150 மைல் தூரத்தினை கடக்கவல்லதாகவும் உடல் உலோகத்தினாலும் அமைக்கப்பட்டுள்ளது. கண்களை கவரும் வகையில் நவீனமயமாக அமைக்கப்பட்டுள்ள இந்தவகை கார்கள் இலங்கையின் பொருளாதார சந்iதையை நிலைநிறுத்தி வெற்றிபெறும் என்பதில் திடம்கொண்டுள்ளனர் இந்த கார் தயாரிப்பாளர்கள். விரைவில் சந்தைக்கு அறிமுகமாகவிருக்கும் இந்தவகை கார்கள் அனைவரையும் கவரும் என்பதில் ஐயமில்லை.
No comments

Powered by Blogger.