அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் தலைமைகள் பதவி துறப்பு!!!

முஸ்லிம் அரசியல் தலைமைகள் ஏற்பாடு செய்துள்ள விசேட செய்தியாளர் மாநாடு ஒன்று இன்று மாலை இடம்பெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தங்களது பதவியை ராஜினாமா செய்த ஆளுநர் இருவரின் கடிதத்தை ஜனாதிபதி உத்தியோக பூர்வமாக ஏற்றுக் கொண்டுள்ளதையடுத்தே அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் தலைமைகள் இவ் விசேட செய்தியாளர் மாநாட்டை ஏற்பாடு செய்துள்ளனர். இச்செய்தியாளர் மாநாட்டில் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் தலைமைகள் அனைவரும் தமது பொறுப்புக்களை துறக்கப் போவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இவ்விசேட செய்தியாளர் மாநாடு இன்று மாலை 3 மணியளவில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தகவல்
தென்னிலங்கை செய்தியாளர்

No comments

Powered by Blogger.