யாழில் வீதி ஆக்கிரமிப்புக்கு எதிராக கவனயீர்ப்பு போராட்டம்!!

                                                                                                           - யாழ் லக் ஷன் -
யாழ்-மாநகர சபைக்குட்பட்ட சம்மாந்தெரு - கே.கே.எஸ் இணைப்பு வீதியின் ஆக்கிரமிப்புகளை அகற்றி பொதுமக்கள் போக்குவரத்து உடனடியாக சம்பந்தப்பட்ட தரப்புக்கள் முன்வர வேண்டும் என வலியுறுத்தி தமிழர் சம உரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் நடைபெறவுள்ளது.

குறித்த கவனயீட்பு போராட்டம் எதிர்வரும் திங்கட்கிழமை மாலை 4.30 மணியளவில் யாழ் சத்திரச் சந்தியில் அமைந்துள்ள வைரவர் ஆலய முன்றலில் ஆரம்பமாகி மூடப்பட்ட K.K.S வீதி முகப்பு வாயிலை சென்றடையவுள்ளது.

எனவே குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தில் பொதுமக்கள் மற்றும் பொதுஅமைப்புக்கள் கலந்து கொண்டு ஆதரவளிக்குமாறு ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.