மாருதம் இணையத்தளத்தில் உங்களது விளம்பரங்களும் இடம்பெற வேண்டுமா.... உடனடித் தொடர்புகளுக்கு 0771519458


சங்கானையில் சமுர்த்தி உரிமப் பத்திரம் வழங்கும் நிகழ்வு!!

                                                                                                                           யாழ் லக் ஷன்
வலி மேற்கு பிரதேச சபைக்குட்பட்ட தெரிவு செய்யப்பட்ட 1191 சமுர்த்தி பயனாளிகளுக்கான உரிமப் பத்திரம் வழங்கும் நிகழ்வு இன்றைய தினம் சங்கானை பிரதேச செயலர் திருமதி பொன்னம்பலம் பிறேமினி அவர்களின் தலைமையில் சங்கானை பிரதேச செயலக கலாசார மத்திய நிலையத்தில் நடைபெற்றது. 

இந் நிகழ்வில் கல்வி இராஜாங்க அமைச்சர் கௌரவ திருமதி விஜயகலா மகேஸ்வரன் மற்றும் வலி மேற்கு பிரதேச சபைத் தவிசாளர் கௌரவ த.நடனேந்திரன் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

மேலும் தெரிவுசெய்யப்பட்ட 1191 சமுர்த்தி பயனாளிகளுக்கான உரிமப் பத்திரங்களும் விருந்தினர்களால் வழங்கிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
No comments

Powered by Blogger.