வடக்கில் யுத்தகாலத்தில் பணியாற்றிய சுகாதாரத் தொண்டர்களுக்கு நியமனம் வழங்குவதில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்!!


                                                                                               -வவுனியா விசேட நிருபர்-
வடக்கில் யுத்தகாலத்தில் பணியாற்றிய சுகாதாரத் தொண்டர்களுக்கு நியமனம் வழங்குவதில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என ஜனராஜா சுகாதார பொதுச்சேவை சங்கத்தின் தலைவர் பீரிஸ் சுவர்ணபால தெரிவித்துள்ளார்.வவுனியாவில் புகையிரத நிலைய வீதியில் அமைந்துள்ள தனியார் மண்டபம் ஒன்றில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்வடக்கு கிழக்கில் நடைபெற்ற யுத்த காலத்தில் பணியாற்றிய சுகாதாரத் தொண்டர்கள் பல நெருக்கடிகளின் மத்தியில் பணியாற்றியிருந்தனர். எனவே எந்;தவிதமான அரசியல் தலையீடுகளும் இன்றி வடக்கில் பணியாற்றிய 825 சுகாதாரத் தொண்டர்களுக்கு நியமனத்தில் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என தெரிவித்தார்.


வடபகுதியில் பல அரச திணைக்களங்களில் இருபது வருடங்களுக்கு மேலாக வேலைக்கான புதிய வெற்றிடங்கள் உருவாக்கப்படவில்லை, வடக்கில் நடைபெறும் சுகாதாரத் தொண்டர்களுக்கான நேர் முகப்பரீட்சையில் அதிகார மட்டத்தில் பாரிய ஊழல்கள் நடைபெறுவதாக தெரிவித்துள்ளார்.