சஹ்ரானை பற்றிய முழுமையான விபரங்களை தெரிவிக்கிறார்; முன்னாள் குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரி நாலக்க டி சில்வா!!

ஹ்­ரானின் பேஸ்புக், இணைய பக்­கங்­களை கண்­கா­ணித்­ததில் அவ­ரது நகர்­வுகள் நல்­ல­தல்ல என்­பதை நான் அறிந்­து­கொண்டேன். ஸஹ்­ரானின் வீடி­யோக்­களை பார்க்கும் போது அது ஐ. எஸ். ஐ. எஸ் சார்­பா­கவே இருந்­தது. ஆகவே நிச்­ச­ய­மாக இவ­ருக்கும் ஐ. எஸ். ஐ. எஸ் அமைப்­பிற்கும் தொடர்­புகள் இருப்­பது தெரிந்­தது. இது குறித்து வாராந்தம் பொலிஸ்மா அதி­ப­ருக்கு நான் நேர­டி­யாக தெரி­வித்தேன்.
வாராந்த புல­னாய்வு மீளாய்வுக் கூட்­டங்­க­ளிலும் தனிப்­பட்ட ரீதி­யிலும் அறி­வித்து வந்தேன். என்னை கைது­செய்த பின்னர் இது குறித்த விசா­ர­ணைகள் நின்­றி­ருக்க வாய்ப்­பில்லை, ஆனால் என்­ன­வா­னது என்­பது குறித்து எனக்கு ஒன்றும் தெரி­யாது. கடந்த ஏழு மாதங்­க­ளாக எனக்கும் இந்த விசா­ர­ணைக்கும் தொடர்­புகள் இருக்­க­வில்லை என பயங்­க­ர­வாத விசா­ரணை பிரி­வுக்கு பொறுப்­பாக இருந்த முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபர் நாலக்க டி சில்வா நாடா­ளு­மன்ற விசேட தெரி­வுக்­குழு முன்­னி­லையில் வாக்­கு­மூ­ல­ம­ளித்தார்.

உயிர்த்த ஞாயிறு தற்­கொலைத் தாக்­குதல் சம்­ப­வங்கள் தொடர்பில் ஆராய்ந்து நாடா­ளு­மன்­றத்­துக்கு அறிக்கை சமர்­ப்பிக்க நிய­மிக்­கப்­பட்ட நாடா­ளு­மன்ற விசேட தெரி­வுக்­கு­ழுவின் இரண்டாம் கட்ட விசா­ரணை நேற்று முன்­தினம் நாடா­ளு­மன்ற குழு அறை 3 இல் இடம்­பெற்­றது.
இந்த விசா­ர­ணைக்­காக பயங்­க­ர­வாத விசா­ரணை பிரி­வுக்கு பொறுப்­பாக இருந்த முன்னாள் பொலிஸ்மா அதிபர் நாலக்க டி சில்வா வர­வ­ழைக்­கப்­பட்­டி­ருந்தார். சக்­கர நாற்­கா­லியில் அவர் வாக்­கு­மூ­ல­ம­ளிக்க வந்­தி­ருந்தார். அவ­ரு­ட­னான விசா­ர­ணையில் பல்­வேறு விட­யங்கள் ஊட­கங்கள் முன்­னி­லையில் தன்னால் தெரி­விக்க முடி­யாது என அவர் ஆரம்­பத்தில் தெரி­வித்­த­தை­ய­டுத்து குறித்த சில கேள்­வி­க­ளுக்கு அவர் ஊட­கங்கள் முன்­னி­லையில் வாக்­கு­மூலம் வழங்­கினார்.

நாலக்க டி சில்வா :- “முதலில் ஒரு விட­யத்தை நான் விசா­ரணை ஆணைக்­குழு முன்­னி­லையில் தெரி­விக்க வேண்டும். ஒரு குற்­றச்­சாட்டின் பேரில் கைது செய்­யப்­பட்­டுள்ள நான் தற்­போது பிணையில் வெளியில் உள்ளேன். ஆகவே, எனது வழக்­கு­க­ளுக்கு பாத­கத்தை ஏற்­ப­டுத்தும் விதத்­திலோ அல்­லது பிணை கோரிக்­கை­க­ளுக்கு பாத­கத்தை ஏற்­ப­டுத்தும் வகையில் எந்த சாட்­சி­யத்­தையும் நான் வழங்க முடி­யாது என்­பதை தாழ்­மை­யுடன் தெரி­வித்­துக்­கொள்­கிறேன். அதற்கு தெரிவுக் குழு அனு­மதி வழங்க வேண்டும்”

தெரி­வுக்­குழு :- உங்­க­ளுக்கு எதி­ராக வழக்­கொன்று இருக்கும் என்றால் அதில் உங்­க­ளுக்கு எந்த சிக்­கல்­களும் ஏற்­ப­டாத வகையில் சாட்­சி­யங்­களை முன்­வைக்க முடியும். ஆகவே நீங்கள் உங்­க­ளுக்கு பாத­க­மான விட­யமோ அல்­லது தேசிய பாது­காப்­புக்கு பாத­க­மான விட­யங்­க­ளையோ ஊட­கங்கள் முன்­னி­லையில் வெளிப்­ப­டுத்­தாது இருக்­கலாம்.

கேள்வி:- உங்­களின் பொலிஸ் வாழ்க்கை பற்றி கூறுங்கள்?

பதில் :- 2012 ​ஆம் ஆண்­டி­லி­ருந்து பயங்­க­ர­வாத தடுப்புப் பிரிவில் பணி­யாற்றி வரு­கின்றேன். அதன் பின்னர் 2015 ஆம் ஆண்டில் என்னை அரச புல­னாய்வு பிரிவின் பிரதி பணிப்­பா­ள­ரா­கவும் அதன் பின்னர் பிரதி பொலிஸ்மா அதி­ப­ரா­கவும் நிய­மித்­தனர். அதில் இருந்து நான் பயங்­க­ர­வாத தடுப்புப் பிரிவில் சேவை­யாற்றி வரு­கின்றேன்.


கேள்வி:- ஏப்ரல் 21 ஆம் திகதி பயங்­க­ர­வாதத் தாக்­கு­த­லுடன் தொடர்­பு­டை­ய­தாக அமைப்­பொன்றின் பெயர் கூறப்­ப­டு­கின்­றது. அது என்­ன­வென்று தெரி­யுமா?

பதில்:- ஆம், தேசிய தௌஹீத் ஜமாஅத் (NTJ) ஆரம்­பத்தில் ஸ்ரீலங்கா தவ்ஹித் ஜமா-அத் என்றே அவர்கள் ஆரம்­பித்­தனர். பின்னர் அவர்­களில் பிள­வுகள் ஏற்­பட்டு பல அமைப்­பு­க­ளாக சிதைந்து இறு­தி­யாக என்.டி.ஜே என்ற அமைப்பை உரு­வாக்­கி­யுள்­ளனர்.


கேள்வி:- என்.ரி.ஜே அமைப்பின் செயற்­பா­டுகள் பற்றி கூறுங்கள்?

பதில் :- எனது ஞாப­கத்தில் உள்­ள­தற்கு அமைய நான் கூறு­கின்றேன், 2013 தொடக்கம் 2014 ஆம் ஆண்டு காலப்­ப­கு­தி­க­ளி­லேயே பயங்­க­ர­வாத தடுப்பு பிரிவில் பணி­யாற்­றிய நேரத்தில் தௌஹீத் ஜமாஅத் அமைப்பு பற்றி தகவல் கிடைத்­தது. முதலில் இந்­தி­யாவில் தான் இந்த அமைப்பு பிறந்­தது எனலாம். தமிழ்­நாடு தௌஹீத் ஜமாஅத் என்று உரு­வாக்­கப்­பட்­டது.


அதுவே இலங்­கை­யிலும் ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாஅத் என்று உரு­வாக்­கப்­பட்­டி­ருந்­தது. ஸஹ்ரான் குறித்தும் அப்­போது தகவல் கிடைத்­தது. அப்­போது அவர்கள் அடிப்­ப­ட­டை­வாத அமைப்­பாக இருந்­தார்­களே தவிர இறுக்­க­மான அடிப்­ப­டை­வாத அமைப்­பாக இயங்­க­வில்லை.

கேள்வி:- இறுக்­க­மான வன்­முறை அடிப்­ப­டை­வாத அமைப்­பாக எப்­போது உரு­வெ­டுத்­தது?

பதில்:- இவர்­களின் வன்­முறை அடிப்­ப­டை­வாதம் என்­பது பயங்­க­ர­வாத குண்டுத் தாக்­குதல் நடத்­திய பின்னர் தானே அவ்­வாறு அடை­யா­ளப்­ப­டுத்­தப்­பட்­டது. அதற்கு முன்னர் சிறு சிறு சம்­ப­வங்கள் இடம்­பெற்­றன. அதுவும் அவர்­களின் குழுக்­க­ளி­டையில் தான் காணப்­பட்­டன. அவர்கள் வன்­மு­றை­யா­ளர்கள் என்­பது 21 ஆம் திகதி தாக்­கு­தல்­களின் பின்னர் தானே அடை­யா­ளப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. அடிப்­ப­டை­வாதம் அதுவே வன்­முறை இறு­தி­யாக பயங்­க­ர­வாதம் என்ற நிலைக்கு செல்லும் என்­பதால் அவற்றை கட்­டுப்­ப­டுத்த வேண்டும். அதுதான் எமது பிர­தான செயற்­பா­டாக இருக்க வேண்டும்.

எமது கட­மையும் அது­வே­யாகும். நாம் அத­னைத்தான் செய்தோம். ஆரம்­பத்தில் வன்­முறை மற்றும் இன­வாத செயற்­பா­டு­களை தடுப்­ப­தற்­கான செயற்­பா­டு­க­ளையே நாம் முன்­னெ­டுத்­து­வந்தோம். சம­கா­லத்தில் இன்­டர்போல் உத­வி­யையும் கோரி­யி­ருந்தோம், நான் உள்­நாட்டு மற்றும் வெளி­நாட்டு பயங்­க­ர­வாத செயற்­பா­டுகள் குறித்து பயிற்­சி­களை பெற்றுக் கொண்­டுள்­ளதால் இந்த விசா­ர­ணை­களை பயங்­க­ர­வாத தடுப்பு பிரிவின் கீழ் முன்­னெ­டுப்­பதே பொருத்­த­மா­னது என்றும் அறிந்­தி­ருந்தேன்.

நான் பத­வியில் இருந்த காலத்தில் இந்த செயற்­பா­டு­களை முன்­னெ­டுத்துச் சென்றேன். என்னால் முடிந்­த­ளவு ஆழ­மாக இவற்றை ஆராய்ந்து செயற்­பட்டேன். எனக்கு அதற்­கான அனு­ம­தியும் உயர் மட்­டத்தில் கிடைத்­தது. முதலில் இருந்த பயங்­க­ர­வாதம் அல்ல இன்று இருப்­பது, இது சர்­வ­தேச பயங்­க­ர­வாத நகர்­வுகள். அதற்­கான நகர்­வு­க­ளுக்கு எம்மை நாம் மாற்­றிக்­கொள்ள வேண்டும். அத­னையே நான் செய்தேன்.

கேள்வி:- ஸஹ்ரான் தொடர்­பாக முன்­னெ­டுத்த விசா­ர­ணைகள் என்­ன­வா­னது?

பதில் – ஆரம்­பத்தில் புலிகள் மற்றும் அத­னுடன் தொடர்­பு­டைய உளவு அமைப்­புக்கள் பற்­றிய தேடு­தல்­க­ளையே முன்­னெ­டுத்து வந்தோம். இவை அனைத்­துமே பொலிஸ்மா அதி­பரின் கட்­ட­ளைக்கு அமை­யவே செய்தோம். ஸஹ்ரான் குறித்த விசா­ர­ணைகள் ஆரம்­பிக்­கப்­பட்ட போது அவர் குறித்த தக­வல்­களை பெற்றுக் கொள்ள அவ­ரு­டைய பேஸ்புக் மற்றும் இணைய பக்­கங்­களை நாளாந்தம் ஆராய்ந்து வந்தோம். அதற்­க­மை­யவே அவர் வன்­முறை அடிப்­ப­டை­வாத பக்கம் செல்­கின்றார் என்­பது அறிந்­து­கொள்ள முடிந்­தது. காத்­தான்­குடி சம்­ப­வத்­தையும் வைத்­துக்­கொண்டு நாம் அவரை தேட ஆரம்­பித்தோம்.


கேள்வி:- காத்­தான்­குடி சம்­பவம் என்ன?

பதில் – 2017 ஆம் ஆண்டில் ஸஹ்­ரா­னுக்கும் மற்­று­மொரு குழு­வுக்கும் இடையில் மோதல் ஒன்று உரு­வா­கி­யது. இந்த மோதல் குறித்து பொலிஸார் நட­வ­டிக்கை எடுத்­தனர், ஆனால் பல்­வேறு தரப்­பினர் முறைப்­பா­டு­களை செய்­தி­ருந்­தனர். அந்த முறைப்­பா­டுகள் குறித்து ஆராய எனக்கு பொலிஸ்மா அதிபர் கூறி­யி­ருந்தார்.

இது தொடர்பில் காத்­தான்­குடி பொலிஸ் நிலையம் விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்­த­தோடு மேல­திக விசா­ர­ணை­களை முன்­னெ­டுக்­கு­மாறு பொலிஸ்மா அதி­பரால் எனக்கும் பணிப்பு விடுக்­கப்­பட்­டது. இது குறித்த தக­வல்­களை நான் நீதி­மன்­றத்தில் சமர்ப்­பித்தேன். எப்­போது என்று எனக்கு நினைவில் இல்லை. ஆனால் சகல அறிக்­கையும் நான் நீதி­மன்­றத்தில் ஒப்­ப­டை­தி­ருந்தேன்.

கேள்வி:- உங்­க­ளுக்கு கிடைத்த தர­வு­களை காத்­தான்­குடி பொலிஸார் ஊடா­கவா அனுப்­பு­வீர்கள்?

பதில்: – இல்லை, நானே நேர­டி­யா­கவே அறிக்­கையை வழங்­கினேன். அதன் பின்னர் ஸஹ்­ரானை பிடிக்க பிடி­யாணை பிறப்­பிக்­கப்­பட்­டது. அத­னைக்­கொண்டு நாம் தேடினோம்.

ஆனால் நாம் தேடிய இடங்­களில் அவர் இருக்­க­வில்லை. ஆகவே, அவர் நாட்டை விட்டு தப்­பித்­தி­ருக்க வேண்டும் என நாம் அனு­மா­னித்தோம். திறந்த பிடி­யாணை ஒன்றைப் பிறப்­பித்து அவரை தேடும் நட­வ­டிக்­கை­களை கையாண்டோம். இன்டர் போல் போன்ற நகர்­வு­க­ளுக்கு செல்ல வேண்டும் என்றால் முதலில் திறந்த பிடி­யாணை அவ­சியம். ஆகவே அதனை செய்தோம்.

கேள்வி:- ஸஹ்ரான் என்ற நபரின் பயணம் அவ்­வ­ள­வாக நல்­ல­தல்ல என்­பதை நீங்கள் அறிந்­து­கொண்­டீர்கள்?

பதில்:- ஆம், அவ­ரது பேஸ்புக், இணையப் பக்­கங்­களை கண்­கா­ணித்­ததில் அவ­ரது நகர்­வுகள் நல்­ல­தல்ல என்­பதை நான் அறிந்து கொண்டேன். இது குறித்து வாராந்தம் பொலிஸ்மா அதி­ப­ருக்கு அறிக்கை வழங்­குவேன். இந்த விடயம் தொடர்பில் என்னைத் தொடர்ந்து கையாள அவரும் பணித்தார். நாம் அதன் மூல­மாக தொடர்ச்­சி­யாக கண்­கா­ணித்து வந்தோம்.


நான் நேர­டி­யாக பொலிஸ்மா அதி­ப­ருக்கு தெரி­வித்தேன். எனது கட­மையும் அதுவே. குறிப்­பாக இந்தத் தக­வல்கள் பொது­வாக பிரிக்­கப்­படும். எல்.ரி.ரி., புலம்­பெயர் அமைப்பு, அடிப்­ப­டை­வாத இவ்­வா­றான அமைப்­புகள் மற்றும் ஐ.எஸ்.ஐ.எஸ் என தனித்­த­னி­யாக நான் வாராந்த புல­னாய்வு மீளாய்வுக் கூட்­டங்­க­ளிலும் தனிப்­பட்ட ரீதி­யிலும் அறி­வித்து வந்தேன். ஒரு வாரத்தில் இடம்­பெற்ற சம்­ப­வங்­களை நான் பொலிஸ்மா அதி­ப­ருக்கு அறி­விப்பேன்.

கேள்வி:- நீங்கள் கூறி­யதை போல் குறித்த நபரின் பேஸ்புக், இணை­யத்­தையும் கண்­கா­ணித்­த­தாக கூறி­னீர்கள், இவற்றில் பல காணொ­ளிகள், புகைப்­ப­டங்கள், தாக்­குதல் குறித்த செய்­திகள், அவ­ரது பிர­சங்கம் எல்லாம் பதி­யப்­பட்­டன, ஆனால் இவை அனைத்­துமே தமிழில் தான் பதி­வேற்­றப்­பட்­டது. இவற்றை எவ்­வாறு கண்­கா­ணிக்க முடிந்­தது.

பதில்:- ஆம், நான் எப்­போது பயங்­க­ர­வாத தடுப்பு பிரிவை கையாள ஆரம்­பித்­தேனோ அப்­போதே எனக்கு தேவை­யான வகையில் தனி அமைப்­பு­களை உரு­வாக்­கிக்­கொண்டேன். அதில் தமிழ் மொழி­பெ­யர்ப்பு அதி­கா­ரி­களும் உள்­ளனர்.

கேள்வி:- ஆம் அதைப் பற்றி தெரிந்­து­கொள்­ளவே கேட்டோம், குறிப்­பாக அவர்­களின் பிர­சங்­கங்­களில் பெளத்த அடிப்­ப­டை­வாதம் குறித்து அதிகம் பேசி­யுள்­ள­துடன் முஸ்லிம் இளை­ஞர்­களை அதற்கு எதி­ராக அணி­தி­ரள அழைப்பு விடுத்­துள்­ளனர். அதுவே கேட்டேன் எவ்­வாறு மொழி­பெ­யர்ப்பு உத­விகள் கிடைத்­தது என்­பது அறிந்­து­கொள்ள.

பதில்:- ஆம், அவற்றை நாம் கையாள எமக்கு அதி­கா­ரிகள் இருந்­தனர். நான் முன்­வைத்த பி அறிக்­கையில் முழு­மை­யாக அனைத்­தையும் கூறி­யுள்ளேன்.

கேள்வி:- நீதி­மன்­றத்தால் விடுக்­கப்­பட்ட திறந்த பிடி­யா­ணை­யை­ய­டுத்து அவர் தேடியும் கிடைக்­க­வில்­லையா ?

பதில் – ஆம், காத்­தான்­குடி, குளி­யாப்­பிட்­டிய, குரு­நாகல் உள்­ளிட்ட பல பகு­தி­களில் வசித்து வந்­தி­ருந்தார்.ஆகவே அங்­கெல்லாம் தேடியும் அவர் கிடைக்­க­வில்லை. திறந்த பிடி­யாணை விடுத்து இன்­டர்போல் உத­வியை பெற்­றுக்­கொள்ள நாம் தீர்­மானம் எடுத்தோம்.


அவர் வெளி­நாட்­டுக்கு தப்­பி­யி­ருக்­கலாம் என நாம் சந்­தே­கப்­பட்டோம், ஆனால் அவ­ரது கட­வுச்­சீட்டை அவ­தா­னித்­ததில் அவர் வெளி­நாடு போன­தாக தெரி­ய­வில்லை. ஆனால் இந்­தி­யாவில் இருப்­ப­தாக ஒரு தகவல் கிடைத்­தது. ஆனால் அத­னையும் உறு­திப்­ப­டுத்த முடி­ய­வில்லை. எனினும் நாம் திறந்த பிடி­யா­ணையை பிறப்­பித்து blue notice விடுத்­தி­ருந்தோம். சிவப்பு எச்­ச­ரிக்கை விட முன்னர் நீல எச்­ச­ரிக்கை விட வேண்டும். பத்து எச்­ச­ரிக்­கைகள் உள்­ளன. சிவப்பு எச்­ச­ரிக்கை தான் இறு­தி­யா­னது. நீல எச்­ச­ரிக்கை என்­பது ஒரு குறிப்­பிட்ட எல்­லைக்குள் மாத்­திரம் தேடு­வ­தாக அமையும்.

கேள்வி:- ஸஹ்ரான் என்­பவர் குறித்து மாத்­தி­ரம்தான் தக­வல்­களை திரட்­டி­னீர்­களா?

பதில்: – இல்லை, தேசிய தௌஹீத் ஜமா­அத்தை ஆராய்ந்த போது பலர் இருந்­தனர். அவர்­களின் பெயர்கள் எனக்கு நினைவில் இல்லை. ஆனால் ராசிக் என்­பவர் பற்­றியும் தக­வல்­களை திரட்­டிக்­கொண்­டி­ருந்தோம். எனினும் ஸஹ்ரான் வேறு திசையில் பய­ணிக்­கிறார் என்­பதை ​அறிந்தே அவரின் பேஸ்புக் பதி­வு­களை மேற்­பார்வை செய்ய ஆரம்­பித்தோம். அவர் குறித்து மட்டும் அதி­க­மான கண்­கா­ணிப்பு இருந்­தது. ஆனால் பலபேர் இருந்­தனர்.


கேள்வி:- இவரை தவிர வேறு யார் பற்­றிய தக­வல்­களை திரட்­டி­னீர்கள்?

பதில்:- பலர் பற்­றிய தக­வல்கள் உள்­ளன. என்னை கைது செய்த பின்னர் எனது பத­வியில் அமர்த்­தப்­பட்ட ஜகத் நிஷாந்­தவை ஆணைக்­கு­ழு­வுக்கு அழைத்து விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்தால் முழு­மை­யான தக­வல்­களை அறிய முடியும். அவ­ரிடம் நான் முழு­மை­யாக விசா­ரணை அறிக்­கையை கொடுத்தேன். அதன் பின்னர் எனக்கு இதைப் பற்றி ஒன்றும் தெரி­யாது. நான் ஏழு மாதங்­க­ளாக சிறையில் இருந்தேன்.


கேள்வி:- ஸஹ்­ரானின் பேஸ்புக் எந்தக் காலப்­ப­கு­தியில் மேற்­பார்வை செய்­யப்­பட்­டது?

பதில் – 2016 ஆம் ஆண்டு இறு­தி­யி­லி­ருந்து 24 மணித்­தி­யா­லங்­களும் அவரின் பேஸ்புக் பதி­வுகள் கண்­கா­ணிக்­கப்­பட்­டன. அப்­போது தெரிந்­தது அவர் வேறு ஒரு திசையில் பய­ணிக்­கின்றார் என்­பது.


கேள்வி:- இந்த பேஸ்புக் பக்­கத்தை தடை செய்ய நட­வ­டிக்கை எடுத்­தீர்­களா?

பதில் – திறந்த பிடி­யாணை பெற்­றுக்­கொண்ட பின்னர், நீல எச்­ச­ரிக்கை , பொலிஸ் வர்த்­த­மா­னியில் தேடப்­படும் நபர் என அறி­விக்­கப்­பட்ட பின்னர் இது குறித்து தொலைத்­தொ­டர்பு விசா­ரணை ஆணைக்­கு­ழு­வுக்கும் தெரி­யப்­ப­டுத்த வேண்டும். முகப்­புத்­தக நிறு­வ­னத்­துக்கும் அறி­விக்க வேண்டும். இந்த அனைத்து செயற்­பா­டு­களும் முன்­னெ­டுக்­கப்­பட்­டன. என்னை கைது­செய்யும் வரையில் இது அனைத்தும் சரி­யாக செயற்­பட்­டன.


கேள்வி:- உங்­களை எப்­போது கைது செய்­தனர்?

பதில்:- 2018 அக்­டோபர் 25 ஆம் திகதி.


கேள்வி:- இன்­டர்போல் நிறு­வ­னத்­திடம் விடுத்த கோரிக்­கைக்கு பதில் கிடைத்­ததா?

பதில் :- எனக்கு அது நினைவில் இல்லை


கேள்வி:- தேடப்­படும் நபர் சர்­வ­தேச நாடு­களில் இருக்­கின்றார் என்­பதும் சரி­யாக கண்­ட­றி­யப்­ப­ட­வில்­லையா?

பதில் – இல்லை, அவர் இந்­தி­யாவில் இருப்­ப­தாக தகவல் கிடைத்­தது அதனை முழு­மை­யாக நம்பி விட­வில்லை. சட்ட ரீதி­யாக எந்த ஆதா­ரமும் இருக்­க­வில்லை. எனினும் தொலை­பேசி அழைப்­புகள் கண்­கா­ணிக்­கப்­பட்­டன. அவ­ருக்கு தெரி­யாதே அவை கண்­கா­ணிக்க திட்டம் வகுக்­கப்­பட்­டது. திறந்த பிடி­யாணை ஒன்று இருப்­பதை காட்­டாது அவரை தேடினோம்.


கேள்வி:- காத்­தான்­குடி பொலிஸ் நிலை­யத்­திலும் அவரை கைது செய்­வ­தற்­கான அறி­வித்­தல்கள் விடுக்­கப்­பட்­டது தானே?

பதில்: – அந்த காலப்­ப­கு­தியில் தான் அவர் தலை­ம­றை­வா­கி­யி­ருந்தார். அதனால் தொழில்­நுட்ப உத­வி­யு­டனும் அவரை தேடும் முயற்­சி­களில் ஈடு­பட்டோம். அது அவ­ருக்கு தெரி­யாது கையா­ளப்­பட்­டது.


கேள்வி:- நீங்கள் கைதாகும் முன்னர் இந்த விசா­ர­ணை­களை நிறுத்­து­மாறு அழுத்தம் கிடைத்­ததா?

பதில்: – இல்லை அவ்­வா­றான அழுத்­தங்கள் வர­வில்லை குறிப்­பாக பொலிஸ்மா அதி­ப­ரி­டத்­தி­லி­ருந்து வர­வில்லை. அர­சியல் அழுத்­தங்கள் எதுவும் வர­வில்லை. அவ்­வாறு எனக்கு ஒன்றும் தெரி­யாது. அவரை கைது செய்ய எமது தனி குழு ஒன்று இயங்­கி­யது. எமக்கு அவரைக் கைது செய்ய வேண்டும் என்ற நோக்கம் இருந்­தது. அவர் குறித்த நேர­டி­யான ஆதா­ரங்கள் கிடைக்­காத கார­ணத்­தினால் அவரைக் கைது செய்து நேர­டி­யாக விசா­ரிக்க வேண்டும் என்ற நோக்­கமே எமக்கு இருந்­தது. அதற்கு எந்த தடையும் இருக்­க­வில்லை.


கேள்வி:- ஆனால் அப்­போ­தைய காலத்தில் மேற்­படி விசா­ர­ணை­களை நிறுத்­து­மாறு பொலிஸ்மா அதி­பரால் உங்­க­ளுக்கு கடிதம் அனுப்­பப்­பட்­டுள்­ளதே?

பதில்: – எனக்கு நினைவில் உள்ள கார­ணி­க­ளுக்கு அமைய பொலிஸ்மா அதி­ப­ரிடம் இருந்து அவ்­வா­றான கடிதம் எதுவும் வர­வில்லை. அவ்­வாறு நிறுத்த கூறவும் முடி­யாதே.


கேள்வி:- எனினும் பொலிஸ்மா அதிபர் 2018 ஏப்ரல் மாதம் கடி­த­மொன்றை அனுப்­பி­யுள்ளார். (குறித்த கடிதம் நாலக டி சில்­லாவின் பார்­வைக்கும் கொடுக்­கப்­பட்­டது) செய­லா­ள­ருக்கு அனுப்­பிய கடி­தத்தில் ஒரு பிர­தியை உங்­க­ளுக்கும் அனுப்­பி­யுள்ளார். புல­னாய்வு செயற்­பா­டு­க­ளுக்கு தடை என்­பதால் இவற்றை நிறுத்த வலி­யு­றுத்­தி­யுள்ளார்.

பதில்:- அப்­ப­டியா, ( ஆவ­ணத்தை முழு­மை­யாக வாசித்த அவர்) இல்லை இது அதற்­கான ஆவணம் அல்ல, இதில் கூறப்­படும் நபர் அவ­ரல்ல. இந்த நபர் அல் கைதா இயக்­கத்­துடன் தொடர்பில் உள்ளார் என்றும் அல் கைதா அமைப்பில் பயிற்­சி­களை பெற்றார் என்றும் கூறப்­பட்­டது. எனது நினைவில் இருக்கும் தக­வல்­க­ளுக்கு அமைய இவர் விமான நிலை­யத்­துக்கு வரு­வ­தற்கு இருந்தார். ஆகவே நாம் இவ­ருக்கு விசா­ர­ணைக்கு வரு­மாறு அழைப்பு விடுத்தோம். அப்­போ­துதான் இந்த கடிதம் எமக்கு அனுப்­பப்­பட்­டது. அவரை கொண்­டு­வர வேண்டாம் அவர் உள­வுத்­துறை செயற்­பா­டு­களில் ஈடு­ப­டு­கின்றார் என்று கூறப்­பட்­டது. இவர் ஸஹ்ரான் அல்ல. இது குறித்த சில விட­யங்­களை தனிப்­பட்ட முறையில் என்னால் கூற முடியும்.

கேள்வி:- இவர்­களின் பின்­ன­ணியில் அர­சியல் தொடர்­புகள் காணப்­பட்­டதா? இவ்­வா­றான நபர்­க­ளுக்கு அர­சியல் வாதி­களின் கட்­ட­ளைகள் இருந்­ததா?

பதில்: – ம்ம்ம், அவ்­வாறு இருக்­க­வில்லை. அர­சியல் தொடர்­புகள் இருந்­த­தாக எமக்கு தெரி­ய­வில்லை. அதேபோல் அவர்கள் குறித்து ஆராய எமக்கு முக்­கி­யத்­துவம் இருக்­க­வில்லை. சந்­தேக நபரை பிடிப்­ப­தி­லேயே முழு அவ­தானம் செலுத்­தப்­பட்­டது. அது குறித்து மட்­டுமே செயற்­பட்டோம்.


கேள்வி:- ஸஹ்­ரா­னுக்கு வெளி­நாட்­டி­லி­ருந்து பணம் கிடைத்­தி­ருந்­த­தாக அறிந்­தீரா?

பதில்:- அவ்­வாறு இருந்­தாலும் ஆனால் அவரின் வங்கித் கணக்கு தர­வு­க­ளுக்கு அமைய அவ்­வாறு சந்­தே­கிப்­ப­தற்­கான சாத்­தி­யங்கள் இருக்­க­வில்லை. அத­னா­லேயே அவரை எமது விசா­ர­ணைக்கு நேர­டி­யாக கொண்­டு­வர வேண்டும். அப்­போ­துதான் உண்­மை­களை கண்­ட­றிய முடியும் என நினைத்தோம். குறிப்­பாக பண மோச­டி­க­ளுடன் பயங்­க­ர­வாத தொடர்­புகள் இருக்­கின்­றதா என்­பது குறித்தும் ஆராய வேண்டும். விசா­ர­ணை­களில் பொது­வாக இதனை செய்வோம்.


கேள்வி:- ஸஹ்ரான் போன்று இன்­னொ­ருவர் “ஆர்மி மொய்தீன்” என்­பவர் பற்றி அறிந்­தி­ருந்­தீர்­களா? காத்­தான்­குடி பிர­தே­சத்தை சேர்ந்­த­வர்தான் இவரும்.

பதில்: – அவ்­வாறு ஒருவர் குறித்து நினைவில் இல்லை. இந்தப் பெயரை கேள்­விப்­பட்­டுள்ளேன். ஆனால் நினைவில் இல்லை.


கேள்வி:- நீங்கள் எப்­போ­தா­வது பாது­காப்பு சபையில் கலந்­து­கொண்­டுள்­ளீர்­களா?

பதில்: – இல்லை, பாது­காப்பு கூட்­டங்­களில் நான் கலந்­து­கொள்­ள­வில்லை. செவ்­வாய்க்­கி­ழமை கூடும் புல­னாய்வு மீளாய்வு கூட்­டங்­களில் தான் கலந்­து­கொள்வேன். பாது­காப்பு கூட்­டங்­க­ளுக்கு எனது மேல் அதி­கா­ரி­களே செல்­வார்
கள்.


கேள்வி:- புல­னாய்வுக் கூட்­டங்­களில் ஸஹ்ரான் பற்றி அறி­வித்­தீர்­களா?

பதில்:- பயங்­க­ர­வாத விசா­ரணை பிரிவின் பணிப்­பாளர் ஊடாக இது­கு­றித்த தக­வல்­களை அறி­வித்­தி­ருந்தேன். எப்­ப­டியும் நாம் இதனை அறி­விக்க வேண்டும். நான் கலந்­து­கொண்ட நேரங்­களில் ஸஹ்ரான் குறித்து அறி­வித்­தி­ருந்தேன். இவரி கண்­கா­ணிக்­கப்­ப­டு­கின்றார் என்று அறி­வித்­தி­ருந்தோம்.


கேள்வி:- பொலிஸ்மா அதி­ப­ருக்கு அறி­வித்­தி­ருந்­தீர்­களா?

பதில்:- ஆம், ஒவ்­வொரு திங்­கட்­கி­ழ­மையும் என்­னி­டத்தில் நடை­முறைச் செயற்­பா­டுகள் பற்­றிய அறிக்கை கோருவார் அப்­போது இது குறித்த தர­வு­க­ளையும் சமர்ப்­பித்­துள்ளேன்.


கேள்வி:- மொஹமட் மில்ஹான் என்­ப­வரின் பேஸ்புக் விவ­ரங்­களை ஆராய்ந்­தீர்­களா?

பதில்:- எனக்கு நினைவில் இல்லை. 7 மாதங்­க­ளாக இந்த செயற்­பா­டுகள் குறித்து ஆரா­யமல் இருந்­ததால் பெயர்கள் நினைவில் இல்லை. ஸஹ்ரான் குறித்து தெரியும்.


கேள்வி:- ஸஹ்ரான் போன்று வேறு நபர்கள் ஐ. எஸ்­ உடன் தொடர்­புகள் இருந்­த­தாக அறிந்­தி­ருந்­தீர்­களா?

பதில்:- பலர் குறித்து விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டன. குறிப்­பாக முதலில் ஐ. எஸ் இல் இருந்த இலங்­கையர் ஒருவர் அவ­ரது பெயர் நினைவில் இல்லை. அங்கு உயி­ரி­ழந்­தவர், அவ­ரது குடும்பம் பின்னர் இலங்­கைக்கு வந்­ததே. அவர்கள் குறித்து ஆராய்ந்து கண்­கா­ணித்து வந்தோம்.


கேள்வி:- இந்த செயற்­பா­டு­களில் உங்­க­ளுக்கும் ஏனைய புல­னாய்வு பிரி­வு­க­ளுக்கும் இடையில் முரண்­பா­டுகள் இருந்­ததா?

பதில்:- அவ்­வாறு இருக்­க­வில்லை, எனது பக்­கத்தில் அவ்­வாறு ஒன்றும் இருக்­க­வில்லை, அவர்­களின் பக்கம் இருந்­ததா என்­பது எனக்கு தெரி­யாது.


கேள்வி:- நீங்கள் கைதா­கிய பின்னர் பயங்­க­ர­வாத விசா­ரணை பிரிவு ஸஹ்ரான் குறித்த விசா­ர­ணை­களை சரி­யாக முன்­னெ­டுத்­ததா?

பதில் – விசா­ர­ணைகள் நின்­றி­ருக்க வாய்ப்­பில்லை. எனது வழி­ந­டத்தல் இல்­லாமல் போனது குறை­பா­டா­கவே இருந்­தி­ருக்கும். எனக்கு கீழ் பணி­யாற்­றிய அதி­கா­ரிகள் புலிகள் பற்­றியே தேடு­தல்­களை முன்­னெ­டுத்து வந்­தனர். இவ்­வா­றான சர்­வ­தேச இஸ்­லா­மிய பயங்­க­ர­வாதம் பற்றி அறிந்­தி­ருக்­க­வில்லை. நானே இவர்­களை வழி­ந­டத்தி சர்­வ­தேச பயங்­க­ர­வாத கண்­கா­ணிப்பின் பக்கம் கொண்­டு­வந்தேன். அவர்­களை நான் வெளி­நா­டு­க­ளுக்கு அனுப்­பியும் அறி­வு­றுத்­தல்­களை வழங்­கியும் பயிற்­று­வித்­துள்ளேன்.


சர்­வ­தேச புல­னாய்வு தரப்­புடன் தொடர்­பு­களை கொண்டு எமது அதி­கா­ரி­களை திற­மை­யான நபர்­க­ளாக மாற்ற நட­வ­டிக்கை எடுத்தேன். இதற்கு தலை­மை­தாங்­கி­யது நான். இவ்­வாறு செய்யும் முதல் சந்­தர்ப்பம் இது­வென்­பதும் குறிப்­பி­டத்­தக்­கது.

கேள்வி:- இந்த விட­யத்தை கையாள உங்­க­ளிடம் தனிப்­பட்ட உபாய மார்க்­கங்கள் இருந்­தி­ருக்க வேண்­டுமே?

பதில் – ஆம், என்­னிடம் தனிப்­பட்ட உபா­ய­மார்க்கம் ஒன்று இருந்­தது. ஸஹ்ரான் என்­பவர் எதிர்­கா­லத்தில் பெரும் பிரச்­சி­னைக்­கு­ரி­ய­வ­ராக உரு­வெ­டுப்பார் என்று எனக்கு தெரிந்­தது. இது குறித்து எனது அதி­கா­ரி­களை அறி­வு­றுத்­தி­யி­ருந்தேன். இவ­ரது செயற்­பா­டு­களை கண்­கா­ணிக்­கையில் இவர் முஸ்லிம் இளை­ஞர்­களை வேறு ஒரு மோச­மான திசைக்கு திருப்­பு­கின்றார் என்று தெரிந்­தது. என்.டி.ஜே என்ற அமைப்பை தடை­செய்ய வேண்டும் என 2018 இல் நான் தெரி­வித்தேன்.


கேள்வி:- யாருக்கு தெரி­வித்­தீர்கள்?

பதில்:- யாருக்கு என்று சரி­யாக ….. இப்­போ­துள்ள அதி­கா­ரியை கேளுங்கள் அதில் எனது அறிக்­கையில் அவை இருக்கும். எனக்கு நினைவில் இல்லை.


கேள்வி:- ஸஹ்ரான் என்­ப­வ­ருக்கு இந்த இஸ்­லா­மிய அமைப்­புகள் என கூறும் அமைப்­பு­களின் உத­விகள் கிடைத்­துள்­ளதா ?

பதில்:- – ஆம், ஸஹ்­ரானின் வீடி­யோக்­களை பார்க்கும் போது அது ஐ. எஸ். ஐ. எஸ் பக்­கமே செல்­கின்­றது. ஆகவே நிச்­ச­ய­மாக இவ­ருக்கும் ஐ. எஸ். ஐ. எஸ் அமைப்­புக்கும் தொடர்­புகள் இருப்­பது தெரிந்­தது. ஐ. எஸ். ஐ. எஸ் அமைப்பின் செயற்­பா­டு­களை நியா­யப்­ப­டுத்தி இவர் காணொ­ளி­களை பதிவேற்றுவார். அதேபோல் ஐ. எஸ். ஐ. எஸ் இணையதளங்களில் உள்ள விடயங்களை அவரது முகப்புத்தக கணக்கு, இணைய பக்கத்தில் பதிவேற்றுவார்.


அப்படி பார்க்கையில் இவர் அந்தபக்கம் போய்விட்டார் என்பது உறுதியாகின்றதே. இவை அனைத்தையும் வைத்து பார்த்தே ஒரு நிலைப்பாட்டுக்கு வந்தோம்.

கேள்வி :- இவ்வாறு சர்வதேச அமைப்புகளுடன் நேரடி தொடர்பை பேணியதை அறிய முடிந்ததா?

பதில் – இல்லை அவ்வாறான நேரடி ஆதாரங்களை பெற்றுக்கொள்ள முடியவில்லை.


கேள்வி:- ஸஹ்ரானின் பேஸ்புக் பதிவுகளில் சர்வதேச நாடுகளின் நபர்களின் லைக், ஷேர் இருக்கும் தானே. அவற்றை வைத்து அவரது சர்வதேச தொடர்புகள் எவ்வாறு என்பது கண்டறிய முடியவில்லையா?

பதில் ​- ஆம், ஆம்.. அவ்வாறு இருந்தது, லைக் இவ்வளவு ஷேர், லைக் உள்ளது என்று தனியாக அறிகையிடுவோம். எப்பிடியும் இவர்களில் அனைவருமே உண்மையான பெயரில் இருப்பதிலையே. அவற்றை கண்டறிய சற்று கடினமான விடயம் தான். ஆனால் அவ்வாறு அறிந்துகொண்டதன் பின்னர் அவரின் நண்பர்கள் தொடர்பிலும் தகவல் தேடினோம்.

கேள்வி:- ஸஹ்ரானின் உண்மையான பேரில் இல்லாது வேறு பொய்யான பெயர்களின் பேஸ்புக், இணைய கணக்குகள் இருந்ததா?

பதில்:- எனது நினைவின் படி, ஸஹ்ரானி டம் இரண்டு பேஸ்புக் கணக்குகள் இருந்தன. இணைய தளப்பதிவும் ஒன்றோ இரண்டோ இருந்தது என நினைகின்றேன்.


கேள்வி:- நாட்டின் பாதுகாப்பு விடயத்தில் சமூக வலைப்பதிவு தளங்கள் பாதிப்பா? அல்லது இருக்கவேண்டுமா?

பதில்;- சமூக வலைப்பதிவு தளங்கள் இருக்க வேண்டும். ஆனால் குழப்பும் செயற்பாடுகள் இருந்தால் அவற்றை கண்காணிக்க ஒரு வேலைத்திட்டம் அவசியம். முகப்புத்தக கலக்குகளில் அவ்வாறு உள்ளது.

பயங்கரவாத அல்லது அடிப்படைவாத செயட்படுகளில் ஈடுபடும் கணக்குகள் இருந்தால் அந்தக் கணக்குல முடக்கப்படும் என உள்ளது. ஏனையவற்றிலும் அவற்றை கையாள வேண்டும். குறிப்பால நாம் முறைப்பாடுகளை இவர்களுக்கு அனுப்பினால் அவர்கள் அதனை பர்கின்றர்களா என்பது கேள்வியே. ஆகவே இதற்கு மாற்று நடவடிக்கை ஒன்றினை நாம் கையாள வேண்டும். அவையும் உள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post