மில் ஸ்ரீ புர பகுதியில் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளான லொறி!!

மில் ஸ்ரீ புர தொடக்கப் பகுதியில் சாரதியின் கட்டுப்பாட்டினை மீறி பாய்ந்து சென்ற லொறி ஒன்று தற்போது விபத்துக்குள்ளாகியிருந்ததாக எமது விரைவு ஊடக செய்தியாளர் தெரிவித்தார்.

நிகழ்ந்த விபத்து பற்றி எமது செய்தியாளர் இவ்வாறு விபரிக்கிறார்

தற்போது கொழும்பினை அண்டிய பிரதேசங்களில் கடும் மழை வீழ்ச்சி பதிவாகிக் கொண்டிருப்பது நாம் அறிந்ததே அந்த வகையில் குறித்த பிரதேசத்தில்  ஏற்பட்டுள்ள பாரியமழை வீழ்ச்சியினால் வீதியில் பயணித்து கொண்டிருந்த லொறியொன்று சாரதியின் கட்டுப்பாட்டினை மீறி பயணித்த பாதையினை விட்டு தடம்புரண்டு எதிரேயுள்ள தென்னை மரமொன்றில் மோதி விபத்துக்குள்ளானது ஆனால் தெய்வாதீனமாக வாகனத்தில் பயணித்த சாரதியும் உதவியாளரும் எதுவித காயங்களுமின்றி உயிர் பிழைத்துள்ளனர்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை அப் பிரதேச பொலிசார் சம்பவ இடத்துக்கு விரைந்து மேற் கொண்டுள்ளார்கள்; எனவே மழை அதிகமாக காணப்படுவதால் சாரதிகள் மற்றும் பயணிகள் தங்கள் பயணத்தினை பாதுகாப்பானதாக்கி கொள்ளுமாறு வேண்டப்படுகின்றீர்கள்.

No comments

Powered by Blogger.