மாருதம் இணையத்தளத்தில் உங்களது விளம்பரங்களும் இடம்பெற வேண்டுமா.... உடனடித் தொடர்புகளுக்கு 0094763966685


சஹ்ரானின் சகாக்களிடம் நான்காம் மாடியில் விசாரணை ஆரம்பம்

(விஜித்தா)
இலங்கை அழைத்து வரப்பட்ட அஹமட் மில்ஹான் உள்ளிட்ட ஐவரிடம் கொழும்பிலுள்ள குற்றப் புலனாய்வுப் பிரிவின் நான்காம் மாடியில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் ருவான் குணசேகர தெரிவித்தார். 
உயிர்த்த ஞாயிறன்று மேற்கொள்ளப்பட்ட தீவிரவாத  தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல்களை நடத்திய தேசிய தெளஹீத் ஜமாத் அமைப்பின் தலைவர் சஹ்ரான் ஹாஷிமின் கீழ் செயற்பட்ட குழுவின் ஆயுதப் பிரிவுக்கு  பொறுப்பாக இருந்த அஹமட் மில்ஹான் எனப்படும் 30 வயதான ஹயாத்து மொஹம்மட் அஹமட் மில்ஹான், டுபாயில் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் இன்று இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார்.  
பயங்கரவாதி சஹ்ரானுக்கு மிக நெருக்கமான  தேசிய தெளஹீத் ஜமாத் அமைப்பின் அனுராதபுர மாவட்ட தலைவராக கருதப்படும் அபுசாலி அபூபக்கர் உள்ளிட்ட  மேலும் நால்வரையும் , அஹமட் மில்ஹானுடன் சேர்த்து குற்றப் புலனாய்வுப் பிரிவு இலங்கைக்கு அழைத்து வந்தது.
அழைத்து வரப்பட்ட பயங்கரவாத சந்தேக நபர்களில் பிரதான சந்தேக நபரான அஹமட் மில்ஹான், கடந்த 2018 நவம்பர் மாதம் மட்டக்களப்பு - வவுணதீவில் இரு பொலிஸ் உத்தியோகத்தர்களைக் கொலை செய்து விட்டு அவர்களின் கடமை நேர  ஆயுதங்களை கொள்ளையிட்ட சம்பவத்தின் பிரதான சந்தேக நபர் என  சி.ஐ.டி.யினர் ஏற்கனவே தகவல்களை வெளிப்படுத்தயுள்ளனர்.


No comments

Powered by Blogger.