மங்கள, ராஜித மற்றும் சதுரவிற்கு பௌத்த சங்க சபை அதிரடி தடை விதித்துள்ளது

அமைச்சர்களான மங்கள சமரவீர, ராஜித சேனாரத்ன மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் சதுர சேனாரத்ன ஆகியோரை கம்பஹா மாவட்ட விகாரைகளின் நிகழ்வுகளுக்கு அனுமதிப்பதில்லை என கம்பஹா மாவட்டத்தின் பௌத்த சங்க சபை தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியுள்ளது .

மேற்குறித்த மூவரும் மகா சங்கத்தினரை அவமதிக்கும் விதமாக கருத்துக்களை வெளியிட்டதினாலேயே இத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கம்பஹா மாவட்ட பௌத்த சங்க சபை அறிவித்துள்ளது .

இத் தீர்மானம் நேற்றிரவு எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments

Powered by Blogger.