தஜிகிஸ்தான் பயணமாகிறார்;ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன!!

சீன,ரஷ்யா எல்லைக்குட்பட்ட பிராந்திய நாடுகளில் காணப்படும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராயும்மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று (13ஆம் திகதி) தஜிகிஸ்தான் நோக்கி பயணமாகவுள்ளார்.

சீனா- ஷங்காய் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த மாநாட்டில் இலங்கை உறுப்பு நாடாக இல்லாத போதிலும் பங்குபற்றலுக்காக விசேட அழைப்பின் பேரில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்து கொள்ளவுள்ளார். 

இதில் சீனா, ரஷ்யா, இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் கலந்து கொள்ளவுள்ளன. பாகிஸ்தான் இந்த மாநாட்டில் கண்காணிப்பு நாடாகக் கலந்து கொள்ளவுள்ளது. 

இம்மாநாடு இவ்வருடம் 5வது முறையாக நடைபெறுகிறது. 14ம் 15ம் திகதிகளில் இரண்டு நாட்களுக்கு துஷன்பே நகரில் நடைபெறவுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட சுமார் 50 சர்வதேச தலைவர்களும் இந்த மாநாட்டில் கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

No comments

Powered by Blogger.