மாருதம் இணையத்தளத்தில் உங்களது விளம்பரங்களும் இடம்பெற வேண்டுமா.... உடனடித் தொடர்புகளுக்கு 0094763966685


அரச பிரதிநிதிகளை சந்திக்கவிருக்கும் இ.போ.ச ஊழியர்கள்!!

பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள தேசிய சேவையாளர் சங்கத்துக்குட்பட்ட இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் பிரதமரின் செயலாளர் உள்ளிட்ட அரசாங்கத்தின் பிரதிநிதிகளைச் சந்தித்து கலந்துரையாடவுள்ளனர்.

குறித்த சந்திப்பு இன்று (வியாழக்கிழமை) தற்போது அலரிமாளிகையில் இடம்பெறவுள்ளது.

இந்த கலந்துரையாடலில் நிதியமைச்சின் செயலாளர் மற்றும் போக்குவரத்து அமைச்சர் அர்ஜூன ரணதுங்க ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.

பதவி உயர்வுக்கு ஏற்ற சம்பள அதிகரிப்பை வழங்குமாறு கோரி, கடந்த இரு நாட்களாக சிறிகொத்தவில் சுமார் 2000 ஊழியர்கள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டதோடு, சிலர் உண்ணாவிரதப் போராட்டத்திலும் ஈடுபட்டிருந்தனர்.

அதன்பின்னர். தேசிய சேவையாளர் சங்கத்துக்குட்பட்ட இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுவருகின்றனர்.

எனினும் பல பிரதேசங்களில் இலங்கை போக்குவரத்து சபை சேவையாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.