பிரதமரை சந்திக்க ஜனாதிபதி மறுப்பு : தீவிரமடையும் ரணில் மைத்திரி மோதல்

(விஜித்தா)

பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியின் குழுவொன்று நேற்று இரவு  ஜனாதிபதியை சந்திக்க ஏற்பாடு செய்திருந்த போதும் இறுதி நேரத்தில் அச் சந்திப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற விசேட அமைச்சரவைக் கூட்டத்தில் தீவிரவாத  தாக்குதல் தொடர்பாக விசாரணை செய்யும்  பாராளுமன்ற தெரிவுக் குழு தொடர்பில் ஜனாதிபதி கடும் கண்டனத்தை வெளிப்படுத்தியதோடு தெரிவுக்குழுவை  ரத்து செய்யும் வரையில் அமைச்சரவைக் கூட்டங்களை நடத்தப் போவதில்லை என்றும்  அறிவித்திருந்தார்.
இந்நிலையிலேயே பிரதமர் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியின் குழு ஒன்று ஜனாதிபதியை சந்திப்பதற்கு ஏற்பாடு செய்திருந்தது. 
சந்திப்புக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த போதும், இறுதி நேரத்தில் அச் சந்திப்பை ஜனாதிபதி ரத்து செய்ததாக கூறப்படுகிறது.


0/Post a Comment/Comments

Previous Post Next Post