அபிவிருத்தியில் புறக்கணிக்கப்படும் கல்முனை அம்பாறை வீதிகள்!

கல்முனை அம்பாறை மத்தியமுகாம் கிராமசேவையாளர் பிரிவிற்குட்பட்ட தமிழ் கிராமங்கள் தொடர்ந்தும் அரசாலும் அரசில் அங்கம்வகித்த அமைச்சர்களாலும் தமிழ் மக்கள் தொடர்ந்தும் உதாசீனப்படுத்தப்படுவதாக விசனம் தெரிவித்தனர்.

கல்முனை – அம்பாறை சடயந்தலாவையூடான வீதி இவ்வருடம் புனரமைக்கப்பட்டு வரும்வேளையில் தமிழ் கிராமமான மத்தியமுகாம் 01 பகுதியூடாக செல்லும் தார் வீதியானது இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவே கண்டனத்தை அன்று வெளிப்படுத்துவதாக தெரிவித்தனர்.

மத்தியமுகாம் கல்முனை பிரதான வீதியின் மத்தியமுகாம் 3 முஸ்லிம் கிராமத்திற்கான வீதிகள் கடந்த மூன்று வருடங்களுக்கு முன் செப்பனிடப்பட்டு தெருவிளக்குகளும் பொருத்தப்பட்டுள்ளதாகவும் ஆனால் தமிழ் கிராம எல்லையோடு இடைநிறுத்தப்பட்டுள்ளமை முஸ்லிம் அரசியல்வாதிகளின் இனவாதப்போக்கை வெளிப்படுத்துவதாக அரசை குற்றஞ்சாட்டினர்.

குன்றும் குழியுமாக காணப்படும் இவ் வீதியில் தினமும் வீதிவிபத்துக்களை ஏற்படுவதாக தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு வருகைதந்த மத்தியமுகாம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.எம்.ஏ.விஜயசிங்க எதிர்புப்பு பேரணியை நிறுத்துமாறு கூறினார். பொலிஸ் அதிகாரி அவர்கள் கெளரவ அமைச்சர் அனோமா ஹமகே அவர்களுடன் தொடர்புகொண்டு விரைந்து தீர்வினை பெற்றுத்தருவதாக கல்முனை விகாராதிபதி சங்கரத்தின தேரர் அவர்களுக்குக்கு வாக்குறுதியழித்தார்.

இதன்போது கருத்துக்களை பகிர்ந்துகொண்ட மக்கள் நாவிதன்வெளி பிரதேசத்தில் ஒன்பதாயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் வரட்ச்சியால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தமிழ் கிராமங்களுக்கு குடிநீர் வழங்குவதில் அசமந்தபோக்குடன் இருப்பதாகவும் பிரதான வீதியால் செல்லும் குடி நீர் குளாய்களிலிருந்து தமிழ் கிராமங்களுக்கு நீர் வழங்கப்படாது முஸ்லிம் கிராமங்களுக்கு நீர் வழங்கியுள்ளதால் தமிழ் மக்கள் அரசியல் ரீதியாக வஞ்சிக்கப்பட்டுள்ளதாக ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.

இவ் கண்டன பேரணியில் வணக்கத்திற்குரிய கல்முனை சுபத்திரா ராமய விகாராதிபதி ரன்முத்துகல சங்கரத்தின தேரர் அவர்களும்,கல்முனை மாநகரசபை உறுப்பினர் எஸ்.ராஜன் அவர்களும், நாவிதன்வெளி பிரதேசசபை உறுப்பினர்கள் நாகேந்திரன் தர்சினி, முருகப்பன் நிறோஜன், அந்தோனி சுதர்சன் அவர்களும் கிராம பொது மக்களும் கலந்துகொண்டு எதிர்ப்பினை வெளிப்படுத்தினர்.