பகிடிவதையால் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி...!!

                                                                 - வந்தாறுமூலை விசேட நிருபர் -
கிழக்கு பல்கலைக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்கள் மீது இரண்டாம் ஆண்டு மாணவர்கள் மேற்கொண்ட பகிடிவதையினால் 4 பேர் காயமடைந்த நிலையில் மட்டக்களப்பு  போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம்  இடம்பெற்றுள்ளது 

நேற்றைய தினம் வியாழக்கிழமை இரவு இச்சம்பவம் இடம் பெற்றுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பல்கலைக்கழகத்தில் விஞ்ஞான பீடத்தில் முதலாம் ஆண்டில் கல்விபயின்றுவரும் 4 மாணவர்கள் மீது சம்பவதினமான  இரவு 2 ஆம் ஆண்டில் கல்விபயின்று வரும் மாணவர்கள் பகிடிவதை மேற்கொண்டு அவர்கள் மீது தாக்குல் நடாத்தியுள்ளனர்.

இதன் போது  படுகாயமடைந்த  மாணவர்களை ஏறாவூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர்  மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர்

இச்சம்பவம்  தொடர்பாக பல்கலைக்கழக நிர்வாகம் மற்றும் பொலிஸார் விசாரணைகளை மேற் கொண்டுவருகின்றனர் .

No comments

Powered by Blogger.