ஆரம்ப கைத்தொழில் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சினால் தேசிய மட்டத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் சமுர்த்தி பயனாளிகளுக்கு உரித்து வழங்கும் வைபவம் திருகோணமலையில் இடம் பெற்றுள்ளது!!

                                                                                                                       - LOGI -
திருகோணமலை மாவட்ட நிகழ்வு கந்தளாய் லீலாரத்ன மைதானத்தில் நேற்று (13) வியாழக் கிழமை சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில் இடம் பெற்றது.

"புதிதாக சிந்திப்போம் தன்னம்பிக்கையோடு முன்னேறுவோம்" எனும் தொனிப் பொருளில் இடம் பெற்ற இவ் நிகழ்வில் ஆறு இலட்சம் பயனாளிகளுக்கு சமுர்த்தி நிவாரண உரித்து வழங்கல் தேசிய நிகழ்வின் ஒரு பகுதி திருகோணமலையில் இடம் பெற்றுள்ளது.
திருகோணமலை மாவட்டத்தில் உள்ள சுமார் 5000 பயனாளிகளுக்கு சமுர்த்தி உரித்து இதன் போது வழங்கப்பட்டன .

ஆரம்ப கைத்தொழில் சமூக வலுவூட்டல் அமைச்சர் தயாகமகே விசேடமாக கலந்து கொண்டு குறித்த பயனாளிகளுக்கான சமுர்த்தி உரிமத்தை வழங்கி வைத்தார்.

குறித்த நிகழ்வில் அமைச்சர் தயாகமகே, வீதி அபிவிருத்தி மற்றும் பெற்றோலிய வளத்துறை பதில் அமைச்சர் அனோமாகமகே, திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா. சம்பந்தன் ,அப்துல்லா மஃறூப், எம்.எஸ்.தௌபீக், இம்ரான் மஹரூப், திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் என்.ஏ.ஏ.புஷ்பகுமார உட்பட பிரதேச செயலாளர்கள், உள்ளூராட்சி மன்ற தலைவர்கள், உறுப்பினர்கள், சமுர்த்தி திணைக்கள உயரதிகாரிகள், சமுர்த்தி பயனாளிகள் என பலர் கலந்து கொண்டார்கள்.