திசர பெரேரா விற்காக விசித்திர ஆர்ப்பாட்டத்தில் குதித்த இளைஞன்

இலங்கை கிரிக்கெட் அணிக்காக மீகொட பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் மரத்தில் ஏறி போராட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளார். நடைபெற்றுக் கொண்டிருக்கும் உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் திசர பெரேராவை முதலில் துடுப்பெடுத்தாட களமிறக்குமாறு கோரியே குறித்த இளைஞர் மரத்தில் ஏறி போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றார். இன்று காலை 8.45 மணி அளவில் மரத்தில் ஏறிய குறித்த இளைஞர் தனது கோரிக்கையை நிறைவேற்றும் வரை மரத்திலிருந்து தான் இறங்கப் போவதில்லை எனக் கூறி தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post