யாழில் பல பகுதிகளில் இன்று மின் தடை!!

                                                                                               - யாழ் லக் ஷன் -
மின்சாரத் தொகுதிப் பராமரிப்பு புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக யாழ்.குடாநாட்டின் பல்வேறு பகுதிகளிலும்  இன்று  சனிக்கிழமை(15) மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபையின் வடமாகாணப் பிரதிப் பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார்.


இதன்படி இன்று காலை காலை-08.30 மணி முதல் பிற்பகல்-05 மணி வரை யாழ். சுன்னாகம் ஒரு பகுதி, சுன்னாகம் கார்கில்ஸ் பூட் சிற்றி, சுன்னாகம் மக்கள் வங்கி, கொத்தியாவத்தை, கந்தையா உபாத்தியார் வீதி, ஜெட் மோட்டார்ஸ், கல்லாரை மல்லாகம், மல்லாகம் நீதிமன்றம் அலுக்கை பகுதிகளிளும்,


அளவெட்டி,பன்னாலை துர்க்காபுரம் தெல்லிப்பழை ஏழாலை ஒரு பகுதி நாவற்குழி நாவற்குழி கேரதீவு வீதி தச்சன்தோப்பு கோகிலாகண்டி மறவன்புலவு தனங்கிளப்பு அறுகுவெளி கைதடி யுனைரைட் மோட்டர்ஸ் கைதடி வடமாகாண சபை கைதடி- கோப்பாய் வீதி கைதடி வடக்கு கைதடி நவபுரம் மட்டுவில் குருநகர் ஐஸ் தொழிற்சாலை வலைத் தொழிற்சாலை கடற்கரை வீதி ஆகிய பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டிருக்குமென அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.