கஜேந்திரகுமாருக்காக காத்திருக்காமல் விக்கினேஸ்வரன் காத்திரமான முடிவை எடுக்கவேண்டும்!!

                                                                                                             - ஷர்மி -
தற்போதைய அரசியல் சூழ்நிலையில் தமிழர்களுக்கு மாற்றுத் தலமை அவசிய தேவையாக உள்ள சந்தர்ப்பத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு மாற்றான அரசியல் கட்சிகளின் கூட்டு மிக முக்கியமாக காணப்படுகிறது. அந்தவகையில் முன்னாள் வடக்கு மாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரன் தலமையிலான ஒரு மாற்று அணியையே தற்போது மக்கள் எதிர்பார்த்துக் கொண்டு இருக்கும் நேரத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியன் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஊடகங்களுக்கு ஓர் கருத்தை வெளியிட்டு இருந்தார். விக்கினேஸ்வரன் அவர்கள் E.P.R.L.F கட்சியை விட்டு தங்களுடன் வந்தால் தாங்கள் விக்கினேஸ்வரனுடன் இணைந்து பயணிப்போம் என கூறியிருந்தார். 

தமிழ் மக்கள் மாற்று தலமையொன்றை எதிர்பார்த்திருந்த நேரத்தில் இவரின் இவ்வாறான கருத்து மக்களிடையே சலசலப்பபை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் தேசியத்தின்பால் நிற்கின்ற கட்சிகள் ஒன்றிணைந்து செயற்படவேண்டுமென விக்கினேஸ்வரன் அழைப்பு விடுத்திருந்தார் இவரின் அழைப்பை உதாசீனப்படுத்துவது போன்றே கஜேந்திரகுமாரின் கருத்து அமைந்திருந்தது. 

நீதியின் குரலாக இருக்கின்ற விக்கினேஸ்வரனை அரசியல் அரங்கில் இருந்து ஒதுக்கவேண்டும் என்பதற்காக பல சதித்திட்டங்களை வகுத்து வருகின்றார் அதன் செயற்பாடகத்தான் விக்கினேஸ்வரன் இந்தியாவின் ஆள் எனவும் சுயுறு எனவும் பகிரங்கமாக அண்மையில் குற்றம்சாட்டியிருந்தார். 

இவருடைய ஒருநாடு இருதேசம் என்கின்ற கொள்கை கடந்த பத்துவருடங்களாக மக்கள் நிராகரித்துவருகின்றமை யாவரும் அறிந்ததே. உள்ளுராட்சி தேர்தல் கேட்கமாட்டேன் மாகாண சபை தேர்தல் கேட்கமாட்டேன் என வீரவசனம் பேசிய இவர் கடந்த உள்ளுராட்சி சபை தேர்தலில் போட்டியிட்டு யாழ் மாநகரசபையை கைப்பற்றுவதற்காக இவருடைய தீவிர விசுவாசியான சட்டத்தரணி ஒருவரை அனுப்பி டக்ளஸ்தேவானந்தாவிடம் டீல் பேசியிருந்தார். இவர் டீல் பேசியதற்குரிய ஆதாரத்தை தக்க தருணத்தில் வெளியிடுவதாக டக்ளஸ்தேவானந்தா அண்மையில் தெரிவித்திருந்தார்.இவர் தனியொருவராக பாராளுமன்றம் சென்று எதை சாதிக்கமுடியும் எனகருதுகிறார் என்று தெரியவில்லை. இவ்வாறக இவரின் முன்னுக்கு பின் முரணான கருத்தை பார்க்கின்றபோது இவர் அரசின் நிகழ்ச்சி நிரலுக்கு உட்பட்டு செயற்படுகின்றார் என்ற சந்தேகம் வலுக்கின்றது.

மக்கள் ஓரு மாற்றுக் கட்சியை விரும்பவில்லை மாற்றுக் கட்சிகளின் கூட்டைத்தான் விரும்புகின்றார்கள் இனியும் இவருக்காக காத்திருக்காமல் தமிழ் மக்களிற்குரிய தீர்வை முன்னிறுத்தி பயணிக்கும் அரசியல்கட்சிகள் அமைப்புக்கள் புத்திஜீவிகள் என்பவற்றை ஒன்றிணைத்து பலமான மாற்று தலமை ஒன்றை அமைக்க விக்கினேஸ்வரன் முன்வரவேண்டும் என்பதே தமிழ் மக்களின் தற்போதைய எதிர்பார்ப்பாக உள்ளது

0/Post a Comment/Comments

Previous Post Next Post