உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : டுபாயில் இருந்து சந்தேகநபர்கள் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்
(விஜித்தா)
உயிர்த்த ஞாயிறு அன்று மேற்கொள்ளப்பட்ட தற்கொலைத் தாக்குதல்களுடன் தொடர்புபட்டவர்கள் என்ற சந்தேகத்தின்பேரில் டுபாயில் கைது செய்யப்பட்ட மொஹம்மட் மில்ஹான் உட்பட ஐந்து பேர் குற்றப்புலனாய்வு பிரிவினரால் நாட்டிற்குள் அழைத்து வரப்பட்டுள்ளனர்.
ஏப்ரல் 21ம் திகதி தாக்குதல் நடத்தப்பட்டதன் பின்னர் மில்ஹான் உள்ளிட்ட ஐவரும் நாட்டில் இருந்து வெளியேறி இருந்த நிலையில், டுபாயில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.
No comments