வவுனியா கூமாங்குளம் சித்தி விநாயகர் வித்தியாலயத்தில் 'திறன் வகுப்பறை' திறந்து வைப்பு!!


                                                                                                                                                                                 - வவுனியா நிருபர் - 
வவுனியா கூமாங்குளம் சித்தி விநாயகர் வித்தியாலயத்தில் திறன் வகுப்பறை (ஸ்மாட் கிளாஸ் றூம்) திறந்து வைக்கும் நிகழ்வு பாடசலையின் அதிபர் எஸ். பாலச்சந்திரன் தலைமையில் இன்று நடைபெற்றது.


நிகழ்வில் பிரதம விருந்தினராக வன்னி பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கலந்து கொண்டு திறன் வகுப்பறையை திறந்து வைத்தார்.நிகழ்வின் முன்னதாக விருந்தினர்கள் பாண்ட் வாத்தியம் முழங்க பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் சகிதம் அழைத்து வரப்பட்டு மங்கள விளக்கேற்றலுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகியிருந்தது.நிகழ்வில் மாணவத் தலைவர்களுக்கு பாராளுமன்ற உறுப்பினரால் சின்னம் சூட்டும் நிகழ்வும் நடைபெற்றது.வவுனியா மாவட்டத்தில் முதல் தடவையாக தன்னார்வம் கொண்டவர்களின் நிதி உதவியில் ஆரம்பிக்கப்பட்ட திறன் வகுப்பறை திநறப்பு விழாவில் வவுனியா தெற்கு கல்வி வலய கோட்டக்கல்விப்பணிப்பாளர்  ம.ஜெகதீஸ்வரன், வவுனியா தரணிக்குளம் கணேஸ் வித்தியாலய பிரதி அதிபர், ரட்ணம் பவுண்டேசன் இணைப்பாளர், பண்டாரிகுளம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, வவுனியா தெற்கு பிரதேச சபை உறுப்பினர் மா. அதிர்ஷ்ட செல்வம், ஆசிரிய ஆலோசகர்கள், கிராம அலுவலர், சமுர்த்தி உத்தியோகத்தர், பெற்றோர், ஆசிரியர்கள், மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.