ராஜிதவுக்கு எதிராக வவுனியா வைத்தியசாலை முன்பாக ஆர்ப்பாட்டம்!!

                                                                                   - வவுனியா விசேட நிருபர் -
சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவிற்கு எதிராக வவுனியா வைத்தியசாலையில் கண்டன ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.


இந்த ஆர்ப்பாட்டம் இன்று (14.06.2019) மாவட்ட அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினரால் வவுனியா பொது வைத்தியசாலைக்கு முன்பாக சுமார் ஒரு மணித்தியாலம் குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. பதாதைகளை ஏந்தியவாறும், கோஷங்களை எழுப்பியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.


சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன நாட்டின் சுகாதார சேவைக்கு மிகப்பாதகமான முறையில் நடந்துகொள்வதாகவும், அரச மருத்துவ அதிகாரிகள் மட்டத்தில் அதிகமான பிணக்குகளை ஏற்படுத்தியுள்ளதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றஞ்சாட்டியிருந்தனர். இதன் காரணமாக அமைச்சருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனக் கோரினர்.