மாருதம் இணையத்தளத்தில் உங்களது விளம்பரங்களும் இடம்பெற வேண்டுமா.... உடனடித் தொடர்புகளுக்கு 0771519458


மக்களின் எதிர்ப்பால் இறம்பைக்குளத்தில் தொலைத் தொடர்புக்கோபுரம் அமைக்கும் பணிகள் இடை நிறுத்தம்!!

                                                                              - வவுனியா விசேட நிருபர் -
வுனியா இறம்பைக்குளம் மகளிர் மகாவித்தியாலயம் மற்றும் மயானத்திற்கு அருகில் தனியார் தொலைத் தொடர்பு நிறுவனத்தினால் அமைக்கப்பட்ட தொலைத் தொடர்புக்கோபுரப் (ரவர்) பணிகள் மக்களின் கடும் எதிர்ப்பு காரணமாக இன்று இடை நிறுத்தப்பட்டுள்ளது.

வவுனியா இறம்பைக்குளம் மயானத்திற்கு அருகில் புதன்கிழமை தனியார் நிறுவனம் ஒன்றினால் வீதிக்கு அருகில் தொலைத் தொடர்புக் கோபுரம் அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதையறிந்த அப்பகுதி மக்கள் ஒன்றிணைந்து குடியிருப்பு, பாடசாலை, ஆலயம், மயானத்திற்கு அருகில் அமைக்கப்படும் தொலைத் தொடர்புக் கோபுரம் அமைக்கும் பணிக்கு தமது எதிர்ப்பினைத் தெரிவித்துள்ளதுடன் கட்டட ஒப்பந்தப்பணியாளர்களுடன் தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளனர். பின்னர் நகரசபையின் கவனத்திற்குக் இவ்விடயம் கொண்டு செல்லப்பட்டு தொலைத் தொடர்புக் கோபுரம் அமைக்கும் பணிகளை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

நகரில் பல்வேறு பகுதிகளில் இவ்வாறான கோபுரங்களை அமைத்து எதிர்காலத்தில் அவற்றை தொலைத் தொடர்புக் கோபுரம் போன்று பாவிப்பதற்கு குறித்த நிறுவனம் முயற்சித்துள்ளதாக மக்கள் குற்றச்சாட்டினை முன்வைத்து தமது எதிர்ப்பினைத் தெரிவித்துள்ளனர். 

இதையடுத்து நகரசபையினால் இத்திட்டம் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. எனினும் நகரசபையில் அனுமதிக்கான விண்ணப்பம் குறித்த தனியார் நிறுவனத்தினால் வழங்கப்பட்டுள்ளது அனுமதி பெற்றுக்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

19அடி உயரமும், 15அடி அகலத்திலும் தொலைத் தொடர்புக் கோபுரம் அமைக்கும் பணிகள் இடம்பெற்று வந்துள்ளது. இதையடுத்து அப்பகுதி மக்களின் எதிர்ப்புக் காரணமாக நகரசபையினால் இப்பணிகள் இடை நிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.