மாருதம் இணையத்தளத்தில் உங்களது விளம்பரங்களும் இடம்பெற வேண்டுமா.... உடனடித் தொடர்புகளுக்கு 0771519458


அரேபியர்களுடன் ஹிஸ்புல்லா தோன்றிய காணொளி தொடர்பாக விசாரணைகள் ஆரம்பம்!!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தற்கொலை தாக்குதல்கள் இடம்பெற்ற தினத்தன்று இரவு அரேபிய பிரஜைகள் மூவரை மட்டக்களப்பு – பாசிக்குடா ஹோட்டல் ஒன்றில் சந்தித்து அவர்களை நாட்டிலிருந்து அனுப்புவதற்கு முயற்சித்ததாக கிழக்கு முன்னாள் ஆளுநர் எம். ஏ.எல்.எம். ஹிஸ்புல்லாஹ்வுக்கு எதிரான குற்றச்சாட்டு முன்வைக்கபட்டுள்ள நிலையில் சம்பவம் தொடர்பில் பயங்கரவாத தடுப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவு தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளன. 

இது தொடர்பில் பயங்கரவாத தடுப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் வருண ஜயசுந்தரவின் கீழ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று (04) ஐவரிடம் வாக்கு மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. குறித்த அரேபிய பிரஜைகளை சந்தித்த மற்றும் அவர்களுக்கான தங்குமிட வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்ததாக கூறப்படும் ஐவரிடமே முதல்கட்ட விசாரணைகள் நடாத்தப்பட்டுள்ளன. இவர்கள் கல்முனை மற்றும் காத்தான்குடி பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

No comments

Powered by Blogger.