சாட்சியமளிப்பதற்கு அனுமதியுங்கள் : ஞானசாரர் சபாநாயகருக்கு கடிதம்

(விஜித்தா)
உயிர்த்த ஞாயிறு அன்று மேற்கொள்ளப்பட்ட தீவிரவாத தற்கொலைத் குறித்து விசாரணை செய்யும் பாராளுமன்றத் தெரிவுக் குழுவில் சாட்சி வழங்குவதற்கு விரும்புவதாக பொதுபல சேனா அமைப்பு தெரிவித்துள்ளது.
பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் மற்றும் அதன் பிரதம நிறைவேற்று அதிகாரி திலந்த விதானகே ஆகிய  ஆகிய இருவருமே தெரிவுக் குழுவில் முன்னிலையாகி சாட்சியமளிக்க விரும்புவதாக  தெரிவித்துள்ளனர்.
குறித்த இருவரும் சாட்சியமளிப்பதற்கு அனுமதி கோரியும் இஸ்லாமிய அடிப்படைவாதம் குறித்த பல்வேறு தகவல்கள் தங்களிடம் இருப்பதாகவும் அவை விசாரணைகளுக்கு பெறுமதியானவை என்றும்  குறிப்பிட்டு  சபாநாயகருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர்.
மேலும் முஸ்லிம் அடிப்படைவாதம் குறித்தும், இவ்வாறான நிலைமை ஒன்று ஏற்படக்கூடும் என்றும் முன்னரே அவர்கள் வெளியிட்ட கருத்துக்கள் அடங்கிய சீடிகளையும் அனுப்பிவைத்துள்ளனர்.No comments

Powered by Blogger.