வவுனியா அல்-இக்பால் மகாவித்தியாலயத்தில் போதை ஒழிப்பு தொடர்பில் செயலமர்வு!!


                                                                                    - வவுனியா விசேட நிருபர்- 
வவுனியா அல்-இக்பால் மகாவித்தியாலயத்தில் போதைப் பொருள் ஒழிப்பு தொடர்பில் செயலமர்வு ஒன்று இன்று இடம்பெற்றது. ஜனாதிபதியின் விசேட செயற்திட்டத்தின் கீழ் இடம்பெறும் போதை ஒழிப்பு நடவடிக்கையின் ஒரு அங்கமாக குறித்த பாடசாலை மாணவர்களுக்கு போதைப் பொருள் பாவனையால் ஏற்படும் பாதிப்புக்கள், மற்றும் போதைப் பொருள் பாவனையைக் கட்டுப்படுத்தல் தொடர்பான கருத்மர்வு இடம்பெற்றது.


பாடசாலை அதிபர் உபைத் தலைமையில் நடைபெற்ற இச் செயலமர்வில் வெண்கல செட்டிகுளம் சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர் இளஞ்சிங்கம், உலுக்குளம் பொலிசார் ஆகியோர் இணைந்து இந்த போதை ஒழிப்பு கருத்தமர்வை நடத்தியிருந்தனர்.
No comments

Powered by Blogger.