தொடரும் முஸ்லிம் மக்களுக்கு எதிரான அடக்கு முறையினால் எவ்வாறு முஸ்லிம் அடிப்படைவாதம் முடிவுக்கு வரும்?!

இலங்­கையில் வாழும் முஸ்­லிம்கள் எவரும் ஐ.எஸ். பயங்­க­ர­வாத அமைப்­புடன் தொடர்­பு­பட்­ட­வர்கள் அல்ல. சஹ்ரான் என்ற நபரும் அவ­ரது குழுவும் முஸ்­லிம்கள் அல்ல. அவ்­வாறு இருக்­கையில் அவர்­களை வைத்­து­கொண்டு எமது முஸ்லிம் மக்­களை நெருக்­க­டிக்குள் தள்­ளக்­கூ­டாது. எமக்கு எதி­ரா­கவும் எமது மதத்­துக்கு எதி­ரா­கவும் மிகவும் கீழ்த்­த­ர­மான விமர்­ச­னங்­களை முன்­வைத்து, எம்மை நோக­டித்து, எமது மக்­களை வேத­னை­ப்ப­டுத்­து­கின்­றன. மோச­மான செயற்­பா­டுகள் நிறுத்­தப்­படும் வரையில் எவ்­வாறு நீங்கள் கூறும் முஸ்லிம் அடிப்­ப­­டை­வாதம் முடி­வுக்கு வரும்? இதில் சகல தரப்பும் சிந்­தித்து செயற்­பட வேண்டும் என அகில இலங்கை ஜம்­மி­யதுல் உலமா சபையின் தலைவர் அஷ்ஷெய்க் எம்.ஐ.எம். ரிஸ்வி முப்தி பாரா­ளு­மன்ற விசேட தெரி­வுக்­குழு முன்­னி­லையில் சாட்­சி­ய­ளித்தார்.  
ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தாக்­குதல் குறித்து விசா­ரணை நடத்தி பாரா­ளு­மன்­றத்­துக்கு அறிக்கை சமர்ப்­பிக்க நிய­மிக்­கப்­பட்ட பாரா­ளு­மன்ற விசேட தெரி­வுக்குழு முன்­னி­லையில் சாட்­சி­ய­ளிக்க அழைக்­கப்­பட்ட அகில இலங்கை ஜம்­மி­யதுல் உலமா சபையின் தலைவர் அஷ்ஷெய்க் எம்.ஐ.எம். ரிஸ்வி முப்தி சாட்­சி­ய­ம­ளிக்­கையில் இவற்றைக் குறிப்­பிட்டார்.  
கடந்த உயிர்த்த ஞாயிறு தாக்­குதல் குறித்து நான் எனது வருத்­தங்­களைத் தெரி­வித்­துக்­கொள்­கிறேன். முஸ்­லிம்கள் எப்­போதும் நாட்­டுக்கு ஏற்ற பயங்­க­ர­வாத செயற்­பா­டு­க­ளுக்கு எதி­ரான வகையில் செயற்­பட்டு வந்­துள்ளோம். பல சந்­தர்ப்­பங்­களில் பெளத்த அடக்­கு­மு­றைகள் இடம்­பெற்ற காலங்­களில் கூட மிகவும் பொறு­மை­காத்து சமு­க­மாக முறை­யாக நடந்­து­கொண்­டுள்ளோம்.
கேள்வி:- இந்த தாக்­குதல் குறித்து சம்­பந்­தப்­பட்ட அதி­கா­ரி­க­ளுக்கு முன்­னெச்­ச­ரிக்கை வழங்­கி­ய­தாகக் கூறப்­ப­டு­கி­றது, உண்­மையா?
பதில்:- ஆம், 2012 நவம்பர் 8 ஆம் திகதி,   முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான வெறுப்­பூட்டல் பேச்சு இன்­று­வரை முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றது. இது ஹலால் தொடர்­பிலே முதலில் பிரச்­சினை தொடங்­கி­யது. 2014 ஆம் ஆண்டு நாம் முதலில் வெறுப்­பூட்டும் கருத்­துகள் நாட்டில் இடம்­பெ­று­வதை சுட்­டிக்­காட்­டி­யி­ருந்தோம். அப்­போ­தைய பாது­காப்பு செய­லாளர் கோத்­த­பாய ராஜ­பக்‌­ஷ­விற்கும் கடிதம் மூலம் அறி­வித்தோம். அந்த கடி­தத்தில் ஜம்இ­யத்துல் உலமா உறுப்­பி­னர்­க­ளாக நாம்  புனித குர்­ஆ­னுக்கு எதி­ரான விமர்­சனம் குறித்தும் எழு­தினோம். சில அமைப்­புகள் இந்த நாட்­டினை நாச­மாக்க முயற்­சிகள் எடுக்­கின்­றன. யுத்த சூழல் ஒன்­றினை மீண்டும் கொண்­டு­வர முயற்­சிகள் எடுக்­கப்­ப­டு­கின்­றன என்ற கார­ணிகளைச் சுட்­டிக்­காட்­டி­யி­ருந்தோம்.  பொது­பல சேனா அமைப்­பிற்கு எதி­ரா­கவும் நாம் முறை­யிட்டோம். மேலும்  2014 இல் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான வன்­முறைச் சம்­ப­வங்கள் அளுத்­க­மையில் இடம்­பெற்­றது.  அதன் பின்னர் நான் தான் உலகில் ஐ.எஸ். அமைப்பை எதிர்த்து பேசி­ய முதல் நபர். மேலும் சிலர் உள்­ளனர். 2014 இல் முதலில் பேசினேன். ஐ.எஸ்­. ஸிற்கும் இஸ்­லாத்துக்கும் எந்த தொடர்பும் கிடை­யாது. இங்கு இவற்றை இட­ம­ளிக்க முடி­யாது எனக் கூறினேன். அளுத்­கமை சம்­ப­வத்­துக்குப் பின்னர் இதனைக் கூறினேன். 
கேள்வி:அளுத்­கமை சம்­ப­வத்­துக் கும் ஐ.எஸ்.ஸிற்கும் என்ன தொடர்பு இருக்­கி­றது?
பதில்: அளுத்­கமை தாக்­கு­தலின் பின்­னரே ஐ.எஸ். கருத்­து­ணர்வு இலங்­கையில் பரவ ஆரம்­பித்­தது. இளை­ஞர்கள் இந்த வன்­முறை உரை­களைக் கையாண்­டனர். மக­ர­க­மவில் பொது­ப­ல­சேனா அமைப்பு வெறுப்­பூட்டும் பேச்­சுக்­களை முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராகப் பரப்­பி­யது. பின்னர் அளுத்­கம சம்­பவம் நடந்­தது. சில இளை­ஞர்கள் ஐ.எஸ். குறித்து பேச ஆரம்­பித்­தார்கள். ஆதில் என்­ப­வரே ஐ.எஸ்.­ஸிற்கு பின்­பு­ல­மாக இருந்தார். இவர் என்னைக் காபிர் என்றார். காபிர் என்றால் முஸ்லிம் அல்­லா­தவர் என்று அர்த்தம். இது தான் ஆரம்பம். அண்­மையில் ஆதில் கைதானார். தொடர்ச்­சி­யாக இரண்டு வரு­டங்கள் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான வன்­மு­றைகள் இடம்­பெற்­றன. சகிக்­க­மு­டி­யாத விதத்தில் சம்­ப­வங்கள் நடந்­தன. இறை­வனைக் கீழ்த்­த­ர­மாக விமர்­சித்­தார்கள். அதன் பின்னர் ஐ.எஸ். பற்றி சில இளை­ஞர்கள் பேசு­வதை நான் பார்த்தேன். இது உண்­மையில் எமது சமூ­கத்துக்கு எதி­ராக நடந்த சம்­ப­வங்­களை அடுத்து உரு­வா­கி­யது.  இஸ்­லாத்­துக்கு எதி­ராகப் பேசு­வோரை நாம் வெறுக்­க­வில்லை. 2012 இல் இருந்து பாது­காப்பு அதி­கா­ரி­க­ளுடன் தொடர்பை  ஏற்­ப­டுத்தி வந்தோம்.
கேள்வி: ஆதில் என்­பவர் உங்­களை காபிர் என விமர்­சித்தார். அவர் யார் என்று தெரிந்­தி­ருந்­தீரா?
பதில்: இல்லை. எனக்கு எதி­ரான சமூக வலைத்­தள விமர்­ச­னங்­களைப் பாது­காப்பு அதி­கா­ரி­க­ளுக்கு வழங்­கினோம். எனக்கு இந்த இளைஞர் குறித்து தெரி­யாது. சமூக வலைத்­த­ளங்­களைப் பார்த்தே இவற்றைத் தெரிந்­து­கொண்டேன். அவர் இளம் இளைஞர். எனக்கு அவர் பற்றிப் பெரி­தாக ஒன்றும் தெரி­யாது. கைது செய்­யப்­பட்­ட பின்­னரே தெரிந்­து­கொண்டேன். நான் ஐ.எஸ். அமைப்பை எதிர்க்­கின்றேன். ஆகவே நான் முஸ்லிம் இல்லை என்று கூறி­யி­ருந்தார். நான் ஒரு­போதும் ஏனைய மதத்­த­வரை விமர்­சித்­த­தில்லை. எமது நிலைப்­பாட்டைத் தெளி­வு­ப­டுத்­தவே நான் தொடர்ச்­சி­யாக முயற்­சித்­துள்ளேன். நான் சகல தரப்­பையும் சந்­தித்து எமது முஸ்லிம் கொள்­கைகள், நாம் யார், என்ற உண்­மை­யான கருத்­துக்­களைத் தெரி­வித்ேதன். அது­மட்டும் அல்ல 2012 ஆம் ஆண்டில் இருந்து இந்த வன்­மு­றைகள் குறித்துப் பேசினோம். அதேபோல் ஹலால் குறித்தும் பேசினோம். 
கேள்வி:- பாது­காப்புச் செய­லா­ளரை எவ்­வாறு தொடர்பு கொண்­டீர்கள்?
பதில்: அப்­போது பலர் மூல­மாக நான் தொடர்­பு­கொண்டேன். நான் மட்டும் அல்ல பலர் என்­னுடன் இருந்­தனர். 
கேள்வி: ஹலால் சான்­றிதழ் முறை எப்­பொ­ழுது ஆரம்­ப­மா­னது?
பதில்:- 2002 ஆம் ஆண்டில் இருந்து. அது 2015ஆம் ஆண்டு வரையில் முன்­னெ­டுக்­கப்­பட்­டது. காசிம் என்ற வைத்­தியர் ஒருவர் மூல­மாக இது முன்­னெ­டுக்­கப்­பட்­டது.  மேலும் பலர் இருந்­தனர். நிபு­ணத்­துவம் வாய்ந்த உறுப்­பி­னர்கள் இருந்­தனர். ஹலால் என்ற விடயம் எமக்கு மிகவும் முக்­கி­ய­மா­னது. உண­வு­களில் இரத்தம், பன்றி உறுப்­புக்கள், கொளுப்­புக்கள், தலை­முடி வகையில், ஜெலட்டின் போன்­றவை கலக்­கப்­ப­டு­கின்­றன. இவை எவையும் எமக்கு ஏற்­பு­டை­யது அல்ல. குறிப்­பாக பன்றி முடியில் தூரிகை செய்­கின்­றனர். இதனைக் கொண்டு நாம் பாண் போன்ற உண­வு­க­ளுக்கு பட்டர் தட­வு­வது என்ற கார­ணிகள் எல்லாம் எமக்கு உகந்­தது அல்ல. இந்த மாதிரி பல கார­ணிகள் உள்­ளன. அப்பிள் பானம் வீட்டில் செய்வோம். இன்று பாருங்கள் ஒரு வருடம் வைத்­தி­ருக்க முடி­கின்­றது. எவ்­வாறு இவை நடக்­கின்­றன. அனைத்­துமே உட­லுக்கு ஏற்­பு­டை­யது அல்ல தானே. ஆகவே தான் நாம் எமது மத கோட்­பா­டு­க­ளுக்கு அமைய  ஹலால் என்ற ஒன்றை உரு­வாக்­கி­யுள்ளோம். இது முரண்­பா­டான ஒன்­றல்ல. எனினும் இங்கு இந்த கார­ணி­களை வைத்து எம்மை விமர்­சித்­தனர். 
கேள்வி: ஹலால் அண்­மையில் தானே நடை­மு­றைக்கு வந்­தது, குர்­ஆனில் வந்­தது அல்­லவே?
பதில்:- உண்­மையில் ஹலால் தாய்­லாந்து, சிங்­கப்பூர் போன்ற நாடு­களில் இருந்து தான் ஹலால் சான்­றிதழ் முறையை ஆரம்­பித்தோம். சவூதி அரே­பி­யாவில் இருந்து கற்­க­வில்லை. பெளத்த நாடுகள் இவை. ஆனால் இலங்­கையில் நாம் ஆரம்­பித்தோம். சில நிறு­வ­னங்கள் எமக்கு கோரிக்கை விடுத்து இதனைக் கையாளக் கூறின. 
கேள்வி:- ஏப்ரல் 21 சம்­பவம் பற்றி என்ன கூற விரும்­பு­கி­றீர்கள்?
பதில்:- 2014 ஆம் ஆண்டு  ஐ.எஸ். ஸிற்கும் எமது முஸ்லிம் மக்­க­ளுக்கும்  எந்த தொடர்பும் கிடை­யாது என்­பதைக் கூறினோம். இலங்­கையில் உள்ள சகல முஸ்லிம் நிறு­வ­னங்­களும் ஒரு­மித்து ஐ. எஸ். அமைப்பை எதிர்த்தோம்.  2015 இல் நிலாம் என்­பவர் ஐ.எஸ்.ஸில் இணைய சிரியா சென்றார். அதேபோல் ஐ.எஸ்.­ஸிற்கு ஆத­ரவு வழங்­கிய ஒருவர் இறந்­தார். இதன்போது எமக்கும் ஐ.எஸ்­.ஸிற்கும் எந்த தொடர்பும் கிடை­யாது என்­பதை நூல் ஒன்றை வெளி­யிட்டு அறி­வித்தோம்.
கேள்வி: கொலை செய்­வது இறை­வனால் ஏற்­றுக்­கொள்­ளப்­ப­டுமா?
பதில்: இல்லை. இது தடை­செய்­யப்­பட்ட ஒன்று. தற்­கொலை செய்­வது என்­பது அனை­வ­ரையும் கொல்­வ­தற்கு சம­மா­னது. அர­சாங்கம் ஒரு­வரைத் தண்­டிக்க முடியும். அது சட்­டத்­துக்கு உட்­பட்­டது. ஆனால் ஒரு மனிதன் தன்னைத் தானே மாய்த்­துக்­கொள்­வது கண்­டிக்­கத்­தக்க ஒன்­றென எமது மதத்தில் மிகத் தெளி­வாகக் கூறப்­பட்­டுள்­ளது.  இஸ்­லாத்­துக்கும் சஹ்­ரா­னுக்கும் எந்த தொடர்பும் கிடை­யாது.பாது­காப்புத் துறையில் இது பற்றிக் கூறி­யி­ருந்தோம். 
கேள்வி:- நீங்கள் இவர்­க­ளுக்கு வலி­யு­றுத்­த­வில்­லையா?
பதில்:- நாம் இலங்­கையில் உள்ள சகல முஸ்லிம் அமைப்­பு­க­ளையும் ஒன்­றி­ணைத்து ஒரு கொள்­கையின் கீழ் இயங்கும் வகையில் வலி­யு­றுத்­தினோம். ஆனால் தெளஹீத் ஜமாஅத் இதில் உடன்­ப­ட­வில்லை. ஆரம்­பத்தில் வந்­தனர். பின்னர் அவர்கள் எம்­முடன் இணை­ய­வில்லை. ஆரம்­பத்தில் 12 நிறு­வ­னங்கள் ஒன்­றி­ணைந்து எமது கொள்கைக் கூற்றில் கையொப்­ப­மிட்­டி­ருந்­தன. இதில் தௌஹீத் ஜமாஅத்  அடங்கும். 2014 ஆம் ஆண்டு இது இடம்­பெற்­றது. ஒற்­று­மையை விரும்பும் அனை­வ­ரையும் நாம் அழைத்தோம். தரீகா, ஏனைய ஜமாஅத் என அனை­வ­ருக்கும் அழைப்பு விடுத்தோம். இந்த நாட்டில் ஒற்­று­மை­யாக வாழ வேண்டும் எமது வழி­காட்­டலைப் பின்­பற்ற வாருங்கள் என அழைப்பு விடுத்தோம். 
கேள்வி: அந்த சமயம் தேசிய தௌஹீத் ஜமாஅத் என்ற அமைப்பு இருந்­ததா?
பதில்:- தௌஹீத் ஜமாஅத் என்­பது பல குழுக்­க­ளாக உள்­ளது. இவர்கள் தமிழ்­நாடு தௌஹீத் ஜமாஅத் அமைப்­புடன் தொடர்பில் உள்­ளனர். இங்­குதான் பிரச்­சினை உரு­வா­கி­யது. 
கேள்வி:- தௌஹீத் ஜமாஅத் எப்­போது உரு­வா­கி­யது?
பதில்:- 1915 இல் பர­க­ஹ­தெ­னி­யவில் இந்த அமைப்பு ஆரம்­ப­மா­னது. அப்­போது அன்­சாருள் தௌஹீத் ஜமாஅத் என்று இருந்­தது. பின்னர் பல  குழுக்­க­ளாகப் பிரிந்­தார்கள். அவ்­வாறே இவர்கள் உரு­வாக்­கப்­பட்­டனர். தௌஹீத் ஜமாஅத் பற்றி புரிந்­து­கொள்ள எமது புத்­தகங்­களை வாசி­யுங்கள். எமக்கு ஒரு சந்­தர்ப்பம் தர­வேண்டும் இது குறித்துப் பேச. இது நீண்ட கார­ணிகள். சுருக்­க­மாகக் கூற முடி­யாது. 
கேள்வி: பிரச்­சினை எவ்­வாறு ஏற்­பட்­டது-? பயங்­க­ர­வா­த­மாக எப்­போது மாற்­றப்­பட்­டது?
பதில்:- இஸ்­லாத்­துக்கும் ஐ.எஸ். க்கும் எந்த தொடர்பும் இல்லை. இதில் முஸ்­லிம்கள் எவரும் ஈடு­பட மாட்­டார்கள். ஆனால் இதில் இளை­ஞர்கள் தவ­றாக வழி­ந­டத்­தப்­பட்­டுள்­ளனர். இவர்­களின் மனதை மாற்ற ஒரு­வி­டயம் போதும். அவ்­வாறு தான் பய­ணித்­துள்­ளது. உல­கத்தில் உள்ள பலர் இஸ்லாம் பற்றி தவ­றான வகையில் விமர்­சிக்க முயற்­சிக்­கின்­றனர். 
கேள்வி: எத்தனை -பேர் தீவி­ர­வாத போக்கில் உள்­ளனர்?
பதில்: ஒரு சிலரே உள்­ளனர். இலக்­கத்தில் கூறு­வது என்றால் 500ற்கும் குறை­வா­ன­வர்­களே இருப்பர். அதில் கூகுல் பயங்­க­ர­வா­தி­களும் அடங்­குவர். சிலர் சிரி­யா­விற்குச் சென்­றனர். அவர்கள் மீண்டும் இலங்­கைக்கு வர  சந்­தர்ப்பம் வழங்­கப்­பட்­டி­ருக்­கி­றது.
கேள்வி:- இவ்வா­றான சம்­பவம் நடக்கும் என நினைத்­தீர்­களா? எவ்­வாறு அதி­கா­ரி­க­ளுக்கு அறி­வித்­தீர்கள்?
பதில்: சஹ்ரான் குழு என்னை பயங்­க­ர­வா­தி­க­ளுடன் தொடர்­பு­ப­டுத்தி விமர்­சித்­தது. ஞான­சார தேர­ருடன் என்னை தொடர்­பு­ப­டுத்­தி­னார்கள். இது குறித்­தெல்லாம் நாம் அறி­வித்தோம். என்­னு­டைய புகைப்­ப­டமும் சஹ்­ரானின் புகைப்­ப­டமும் இணைந்த படம் வெளி­யி­டப்­பட்­டது. நாங்கள் அனை­வரும் ஒரு அணி என்ற வகையில் தான் படத்ைத பார்த்தால் தெரியும். ஆனால் என்­னையும் ஞான­சார தேர­ரையும் இணைத்து புகைப்­ப­டங்­களை வெளி­யிட்­டனர். எனக்கும் தேர­ருக்கும் எந்த தொடர்பும் இருக்­க­வில்லை. திகன சம்­ப­வத்தின் பின்னர் என்னைத் தான் முதலில் கொல்ல வேண்டும் என கூறி­யுள்ளார். பொய்­யான புகைப்­ப­டங்­களை வெளி­யிட்டு என்னைக் கொல்ல வேண்டும் என கூறி­யுள்ளார். 
கேள்வி:- இது  தொடர்பில் முறை­யிட்­டீர்­களா?
பதில்:- சஹ்ரான்  தொடர்­பான இறு­வட்டை ஜன­வ­ரியில் பாது­காப்பு செய­லா­ள­ருக்கு வழங்­கினோம். சில ஆவ­ணங்­க­ளையும் வழங்­கினேன். 
கேள்வி:- இறு­வெட்டில் என்ன காணப்­ப­டு­கி­றது? 
பதில்:- சக­வாழ்வு பற்றி நாம் பேசு­கையில் அவர்  அதற்கு எதி­ராகப் பேசினார். அவரின் இரு உரைகள் அதில் உள்­ளன. 
கேள்வி:- எப்­பொ­ழுது ஆற்­றிய உரை இவை?
பதில்:- திகன  தாக்­கு­த­லுக்கு பின்­னரே இந்த உரைகள் நிகழ்த்­தப்­பட்­டன. முன்­னணி இஸ்­லாமிய அறி­ஞர்­களைக் கொல்­லு­மாறும் அவர் கூறி­யி­ருந்தார்.
கேள்வி:- சஹ்ரான்  குழு  திகன சம்­ப­வத்தை வைத்து முஸ்லிம் இளை­ஞர்­க­ளைத்தூண்­டி­யதா?
பதில்: -130 கிளைகள் எமக்­கி­ருக்­கின்­றன. 2017 இல் இருந்து சஹ்ரான் தொடர்பில் செயற்­பட்டோம். சஹ்ரான் கைது செய்­யப்­பட வேண்டும் என பல நட­வ­டிக்கை எடுத்தோம். அவரின் கொள்­கைகள் இஸ்­லாத்­துடன் தொடர்­பு­டை­ய­வை­யல்ல.ஆரம்­பத்தில் எமக்கும் சஹ­்ரா­னுக்கும் இடையில் கருத்து முரண்­பா­டுகள் இருந்­தன. ஆனால் அவர் இவ்­வாறு வன்­முறை செயற்­பா­டு­களில் ஈடு­ப­டுவார், இந்தக் குழு இவ்­வாறு அட்­டூ­ழியம் செய்யும் என நான் என் கன­விலும் நினைக்­க­வில்லை.பயங்­க­ர­வாத தாக்­கு­தலை எதிர்­பார்க்­க­வில்லை. இலங்­கை­யி­லுள்ள தௌஹீத் ஜமாஅத் அமைப்­பி­லுள்ள சிலர் சட்­டத்தை கையில் எடுத்­தார்கள். அதுதான் காத்­தான்­கு­டி­யிலும் இடம்­பெற்­றது. 
கேள்வி: சூபி சமய குழுக்­களை அவர்கள் தாக்­கி­னார்கள்?
பதில்: சஹ்­ரானும் அவ­ரது குழுவும் எம்­முடன் ஒரு­போதும் இருக்­க­வில்லை.பி.ஜே.யுடன் தொடர்­புள்ள அமைப்பே இலங்கை தௌஹீத் ஜமாஅத் 
கேள்வி: சஹ்ரான் போன்று வேறு நபர்கள் உள்­ள­னரா.
பதில்: இல்லை. 
கேள்வி: அப்துல் ராஸிக் பற்றி என்ன தெரியும்?
பதில்: அவர் எம்­முடன் சேர்ந்து செயற்­ப­டு­ப­வ­ரல்ல. எமது கருத்­துக்­களை அவர் ஏற்க மாட்டார். அவர்  பி.ஜே. வழியில் செல்­பவர். அவர்­களின் சொந்த நிலைப்­பாட்டில் அவர்கள் உள்­ளனர். 
கேள்வி: ஐ.எஸ். தொடர்­புள்­ள­வர் கள் பற்றி 2014/2015 இல் அறிந்­தி­ருந்தீர்.
பதில்:ஆம். வெறுப்­பு­ரைகள் தான் அதி­க­மாக இவர்­களால் முன்­வைக்­கப்­பட்­டுள்­ளன. அதி­கா­ரி­க­ளுக்கும் இது குறித்து முறைப்­பாடு செய்தோம். ஆனால் இவ்­வா­றான கருத்­துக்­களை முன்­வைக்கும்போது எமக்கு பாது­காப்பு வழங்­க­வில்லை. ஆகவே எமக்கும் அச்­சு­றுத்தல் உள்­ளது. 
கேள்வி: ஐ.எஸ். அமெ­ரிக்­காவின் தயா­ரிப்புத் தானே?
பதில்: ஐ.எஸ்.­ஸுடன் முஸ்­லிம்­க­ளுக்கு தொடர்பு கிடை­யாது.
கேள்வி: தௌஹீத் அமைப்­புகள் பற்றி என்ன கூறு­கி­றீர்கள்.
பதில்: பௌத்த பீடங்கள் போன்று இங்கும் பிரி­வுகள் இருக்­கின்­றன. கிறிஸ்­தவ மதத்­திலும் இவ்­வாறு பிரி­வுகள் உள்­ளன. அதேபோல்தான் எமது சமூ­கத்­திலும் பிள­வுகள் உள்­ளன. கிறிஸ்­தவ சம­யத்தில் சில அடிப்­ப­டை­வாத அமைப்­புகள் உள்­ளன தானே. 
கேள்வி: இளை­ஞர்கள் மத்­தியில் தவ­றான கருத்­துகள் பர­வு­வதை மாற்­று­வ­தற்கு என்ன செய்ய வேண்டும்.?
பதில்:- இது குறித்து நாம் சகல தரப்பும் ஒன்­றாக செயற்­பட வேண்டும்.இருப்­பினும் நாம் இந்த நாட்டில் ஜன­நா­யக ரீதியில் வாழவே முயற்­சித்து வரு­கின்றோம். ஆனால் ஒன்றை நினைவில் வைத்­துக்­கொள்­ளுங்கள், இந்த நாட்டில் நாங்கள் தீ­வி­ர­வா­திகள் அல்ல, நாம் ஜிஹாத் குறித்து என்ன கரு­து­கிறோம், ஜிஹாத் ஒரு­போதும் தலிபான், அல் கைதா கொள்கை அல்ல என்ற கார­ணி­களை தொடர்ச்­சி­யாக கூறி வரு­கின்றோம். ஆனால் நீங்கள் (தெரி­வுக்­குழு உறுப்­பி­னர்­களை நோக்கிக் கூறி­யது) எங்­களைத் தொடர்ந்தும் நோக­டித்து கீழ்த்­த­ர­மாக நடத்தி வரு­கின்­றீர்கள். எமது கொள்கை, எமது மதம் அவ­ம­திக்­கப்­பட்டு வரு­கின்­றது. நாம் அடிப்­ப­டை­வா­திகள் எனக் கூறி பெளத்த தேரர்கள் எமக்கு எதி­ரா­கவும் அதேபோல் அர­சியல் வாதிகள் எமக்கு எதி­ரா­கவும் செயற்­ப­டு­வது எம்மை வேத­னைப்­ப­டுத்­தி­வ­ரு­கின்­றது. ரமழான் மாதத்தில் இரண்­டா­யிரம் முஸ்­லிம்கள் கைது­செய்­யப்­பட்­டுள்­ளனர். ஜிஹாத் புத்­தகம் வைத்­தி­ருந்த குற்­றத்தில் எமது முஸ்லிம் மக்கள் கைது­செய்­யப்­ப­டு­கின்­றனர். சுக்கான் சின்னம் பொறித்த உடை அணிந்த குற்­றத்தில் பெண் ஒருவர் கைது­செய்­யப்­பட்டார். முகத்தை மூடி எச்சில் துப்ப முயன்ற பெண் ஒருவர் கைது­செய்­யப்­பட்டார். இவ்­வாறு நீங்கள் நடந்­து­கொண்டால் எங்கே அடிப்­ப­டை­வாதம் நிறுத்­தப்­ப­டப்­போ­கின்­றது? முதலில் அர­சாங்கம் உரிய சட்­டங்­களை சக­ல­ருக்கும் ஒரே மாதிரி பிர­யோ­கிக்க வேண்டும். தேசிய பாது­காப்பு உறு­திப்­ப­டுத்தும் சகல சட்­டத்­தையும் ஆத­ரிக்க நாம் தயா­ராக உள்ளோம். இதனை நாம் வெளிப்­ப­டை­யாகத் தெரி­வித்தும் விட்டோம். கடு­மை­யான சட்­டங்­களைக் கொண்டு நாட்­டினை பலப்­ப­டுத்த வேண்­டிய பொறுப்பு அர­சாங்­கத்தைச் சார்ந்­தது. 
கேள்வி: 2000 அல்ல 600 பேர் வரையே உள்­ளனர். அதில் பலர் விடு­த­லை­யா­கி­யுள்­ளனர். சந்­தே­க­ந­பர்­க­ளா­கவே பலர் கைதா­கி­யுள்­ளனர்.சொற்­ப­மான பயங்­க­ர­வா­தி­களே கைதா­கி­யுள்­ளனர்? 
பதில்: நாம்  பாது­காப்பு அமைச்சுடன் இணைந்து செயற்படுகிறோம். ஒவ்வொரு பள்ளிவாசல்களினூடாகவும் இளைஞர் களை அடையாளம் செய்து சகவாழ்வு வழங்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.
கேள்வி: வெறுக்கத்தக்க பேச்சு காரணமாக முஸ்லிம்களை தூண்டப் பட்டதாக கூறினீர்கள். ஐ.எஸ். தாக் 
குதல் தவிர வேறு உள்ளூர் காரணங்களும் 21-/4 தாக்குதலுக்கு பின்புலமாக அமைந்ததா?
பதில்: அதுபற்றி எதுவும் கூற முடியாது. நாம் ஒடுக்கப்பட்டாலும் சகிப்புத்தன்மையுடன் வாழ்கிறோம். என்னிடம் ஒரு கேள்வி உள்ளது இன்னும் எத்தனை காலத்துக்கு அவசரகால சட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது? 
சரத் பொன்சேகா:
பிரச்சினை முடிந்து விட்டதாக கூற முடியாது. பொலிஸ் விசாரணை தொடர வேண்டும். இன்னும் 10-15 பயங்கரவாதிகள் இருந்தாலும் இவ்வாறான தாக்குதல் நடக்கலாம்.
ரிஸ்வி முப்தி :- அவசர கால சட்டத்தை தொடரப் போகிறீர்களா?
கேள்வி: பாதுகாப்பிற்கு உத்தரவா தம் கிடைக்கும்வரை தொடர நேரிடும். இராணுவ நடவடிக்கைகளை நிறுத்த முடியாது.
ரிஸ்வி முப்தி:- நாம் எந்த சந்தர்ப்பத்திலும் தேசிய பாதுகாப்பை பலவீனப்படுத்த முயற்சிக்கவில்லை. நாம் சகல நேரங்களிலும் அரசாங்கத்துடன் இணைந்து பயணிக்கத் தயாராக உள்ளோம். அதுமட்டும் அல்ல தேசிய பாதுகாப்பை பலப்படுத்த எம்மாலான சகலதையும் நாம் செய்ய தயாராகவே உள்ளோம். இதனை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். நாம் சகிப்புத்தன்மையுடன் வாழ்கிறோம். சட்டம் ஒழுங்கின் பிரகாரமே எமது மக்களை நடக்க வலியுறுத்தி வருகின்றோம்.