கட்டார் நாட்டு மெட்ரோ ரயிலுக்கான அறிவிப்பு பலகையில் தமிழ் மொழியும் இணைப்பு!!
அண்மையில் மத்திய கிழக்கு நாடான கட்டாரின் மெட்ரோ ரயிலுக்கான. விலைப்பட்டியல் அறிவிப்பு பலகையில் தமிழ் மொழியும் இடம்பெற்றுள்ளமை தமிழர்கள் பலரையும் நெகிழ்சிக்குள்ளாக்கியுள்ளது.
இவ்வாறான அரபு தேசங்களில் தமிழ் மொழி இணைப்பானது தமிழுக்கும் தமிழருக்கும் பெருமை தரக்கூடிய விடயமாக அமைந்தது மட்டுமல்லாமல் மொழிக்கான அங்கீகாரத்தினையும் பறை சாற்றி நிற்கிறது குறிப்பிடத்தக்கது.
கட்டார் அரசின் இச் செயலானது சமூக வலைத்தளங்களில் பெரும் வரவேற்பினைப் பெற்றுள்ளது.
இவ்விடயம் சம்பந்தமாக முக நூல் பிரபலம் புலோலியூர் சதாவதானி அவர்கள் கருத்து தெரிவிக்கையில்.... கட்டார் அரச குடும்பத்தில் தமிழர் ஆலோசகராக இருப்பதால்தான் இவ்வாறான நிகழ்வுகள் இடம்பெற்றிருக்கிறது என்பதோடு மட்டுமல்லாது அரச குடும்பத்தவருக்கு தனது வாழ்த்துக்களையும் மகிழ்ச்சிகளையும் தெரிவித்துள்ளார்.
No comments