மாருதம் இணையத்தளத்தில் உங்களது விளம்பரங்களும் இடம்பெற வேண்டுமா.... உடனடித் தொடர்புகளுக்கு 0771519458


மட்டு- ஈஷ்டர் ஞாயிறு தின குண்டு வெடிப்பில் சிக்கி காயமுற்றிருந்த இளைஞன் பரிதாபகரமாக உயிரிழந்தார்!!

கடந்த ஏப்ரல் 21 ஈஷ்டர் ஞாயிறு நாளில் மட்டக்களப்பு சேயோன் தேவாலயத்தில் இஸ்லாமிய பயங்கரவாதிகள் நடத்தியமிலேச்சத்தனமான தற்கொலை குண்டுத் தாக்குதலில் படுகாயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று அதன் பின் கண்டி தேசியவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த மட்டக்களப்பு இருதயபுரத்தினைச் சேர்ந்த செ.அருண்பிரசாத்(30வயது) என்பவர் இன்று 04/06/2019 சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 

மட்டக்களப்பு இருதயபுரம் கோல்டன் ஈகிள் விளையாட்டுக்கழக உறுப்பினரும் சிறந்ததுடுப்பாட்ட வீரருமான அருண்பிரசாந்த்(சாந்தி) பல விளையாட்டுக்களில் சாதனை புரிந்த சிறந்த முன்னணி துடுப்பாட்ட விளையாட்டு வீரனின் இழப்பு மட்டக்களப்பு மாவட்டத்திற்கு பாரிய இழப்பாகும்.

இதே வேளை ஏப்ரல்21 உயிர்த்த ஞாயிறுழதாக்குதலில் மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 30ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

உயிழந்த இளைஞருக்கான அஞ்சலி  நாளை 05/06/2019 புதன் கிழமை இருதயபுரத்தில் அவரது இல்லத்தில் இடம்பெறுமென தெரிவிக்கப்படுகிறது.

No comments

Powered by Blogger.