பதில் அமைச்சர்களாக மூவர் நியமனம்

பதில் அமைச்சர்களாக மூவர் நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

நகர திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் இராஜாங்க அமைச்சர் லகீ ஜயவர்தன, நகர திட்டமிடல், நீர்வழங்கல் மற்றும் உயர்கல்வி பதில் அமைச்சராக ஜனாதிபதியினால் இன்று(10) நியமிக்கப்பட்டுள்ளார்.
 

அவ்வாறே, கைத்தொழில் மற்றும் வர்த்தக விவகார பிரதியமைச்சரான புத்திக்க பத்திரண, கைத்தொழில் மற்றும் வர்த்தக, மீள்குடியேற்ற, கூட்டுறவு அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி மற்றும் திறன் அபிவிருத்தி பதில் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அத்துடன். பெற்றோலிய அபிவிருத்தி பிரதியமைச்சர் அனோமா கமகே, பெருந்தெருக்கள் மற்றும் வீதி அபிவிருத்தி மற்றும் பெற்றோலிய வள அபிவிருத்தி பதில் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post