மாருதம் இணையத்தளத்தில் உங்களது விளம்பரங்களும் இடம்பெற வேண்டுமா.... உடனடித் தொடர்புகளுக்கு 0094763966685


பரிசுக்கான காசோலையைத் தவறவிட்டனே தவிர  உலகக் கிண்ணத்தை கைவிடவில்லை : அர்ஜூன ரணதுங்க!!

1996 உலகக் கிண்ணத் சுவீகரித்தபின்னர் மக்களுடன் இடிபட்டதால்இடறி விழுந்த வேளையில் பரிசுச்தொகைக்கான காசோலையையேதவறவிட்ட போதிலும் உலக கிண்ணத்தை கைவிடவில்லைஎன அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

‘‘அவுஸ்திரேலியாவைவெற்றிகொண்டு உலகசம்பியனானதுடன் வெற்றிமேடையில் வைத்துவெற்றிக் கிண்ணமும்காசோலையும் எனக்குவழங்கப்பட்டது.

அந்த சந்தர்ப்பத்தில் என்னைமக்கள் சூழ்ந்துகொண்டதால் நான்தவறி வீழ்ந்தேன். நான் கீழேவீழ்ந்தபோது காசோலையைத்தவறவிட்டபோதிலும் கிண்ணத்தைபற்றிப் பிடித்துக்கொண்டுதான்இருந்தேன்’’ என அர்ஜுனகுறிப்பிட்டுள்ளார்.


‘‘எனது நினைவின் பிரகாரம், 1996இல் பணப்பரிசாக எமக்கு 30,000 டொலர்கள் கிடைத்தது. அப்போதுஒரு டொலரின் பெறுமதி 70 ரூபாஅல்லது 80 ரூபாவாகஇருந்திருக்கும். அந்தப்பரிசுக்தொகையை நாங்கள் 14 பேரும் பகிர்ந்துகொண்டோம்.

பணத்தைப் பற்றி நாங்கள் பெரிதாகஎண்ணவில்லை. உலகக்கிண்ணத்தை வென்றதைத்தான்பெறுமதியாக எண்ணினோம். அதற்கு உதாரணமாகத் தான்காசோலையைத் தவறவிட்டேனேதவிர உலகக் கிண்ணத்தை அல்லஎனக் குறிப்பிட்டேன்’’ என அர்ஜுகூறியுள்ளார்.

No comments

Powered by Blogger.